டி20 உலகக் கோப்பை நாங்கள் இந்தியா வர மாட்டோம்.. இத செய்யுங்க – பங்களாதேஷ் பிடிவாதம்.. காரணம் என்ன?

0
94
Bangladesh

அடுத்த மாதம் பிப்ரவரி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில், தாங்கள் இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தெரிவித்திருக்கிறது.

பங்களாதேஷில் நடைபெற்று வரும் விரும்பத்தகாத சம்பவங்களின் காரணமாக, அந்த அணியின் வீர முஸ்தஃபீஸூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை விடுவித்தது.

- Advertisement -

பங்களாதேஷ் போட்டிகள்

டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இத்தாலி இடம்பெற்று இருக்கும் பிரிவில் பங்களாதேஷ் அணியும் இடம் பெற்று இருக்கிறது. இவர்களுடைய போட்டி பெரும்பாலும் கொல்கத்தாவிலும் ஒரு போட்டி மும்பையிலும் நடைபெற அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பாக இந்தியா பங்களாதேஷ் சென்று விளையாடுவதற்கான அட்டவணையை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தங்கள் நாட்டு வீரரை ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றியதால், உடனடியாக இந்தியா வந்து தாங்கள் விளையாட மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இதன் முடிவு என்ன?

தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஐசிசி அமைப்பிடம் முறையிட உள்ளதாக தெரிகிறது. தங்களது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க இருக்கிறது. இது எந்த அளவுக்கு தொடரும்? பாகிஸ்தான் இந்தியா போல மாறுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதையும் படிங்க : ருதுராஜ் கிட்ட இத செஞ்சி இருப்பாங்கனு நினைக்கிறேன்.. நானே பாதிக்கப்பட்டு இருக்கேன் – இர்பான் பதான் பேச்சு

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணி பங்களாதேஷ் சென்று வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரும் நடைபெறுமா? என்பது சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது.

- Advertisement -