நாங்க இந்தியாவுக்கு சமமா இருக்கோம்.. ஆனா இங்கே இந்த விஷயம் வெறுப்பா இருக்கு – நஜ்முல் சாந்தோ பேட்டி

0
1687
Shanto

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டு இருப்பது வெறுப்பாக ஏமாற்றமாக இருப்பதாக பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறியிருக்கிறார்.

தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் நாளில் 34 ஓவர்கள் வீசப்பட்டதோடு அப்படியே நிற்கிறது. இன்று இரண்டாவது நாள் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டது.

- Advertisement -

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பரிதாபம்

இறுதியாக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒருநாள் முழுக்க போட்டி நடைபெறாமல் இருந்தது இறுதியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிராக பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் நடந்தது. அதற்குப் பிறகு தற்பொழுதுதான் முழு நாளும் போட்டி நடக்காமல் தடைப்பட்டு இருக்கிறது.

இனி மொத்தமாக மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், ஒரு இன்னிங்ஸ் கூட ஒரு அணிக்கு முழுமை அடையாமல் இருப்பதால், இந்தப் போட்டியை டிராவில் முடியவே மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி டிராவில் முடியும் பொழுது இந்திய அணிக்கு அது இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு கொஞ்சம் பின்னடைவாக அமையும்.

- Advertisement -

போட்டி சமநிலையில் இருக்கிறது

இது குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “விக்கெட் விளையாடுவதற்கு நன்றாகவே இருந்தது ஆனால் இடைவெளி விட்டு வந்து விளையாடுவது தான் சிரமமாக இருந்தது. இப்படி பேட்டிங் செய்வது கடினமானது என்பதை மனதில் வைத்து விளையாட வேண்டும். மேலும் மூன்று மற்றும் நான்காம் நாட்களில் சவால் எப்படி இருக்கும்? என்று எங்களுக்கு தெரியாது”

“நாங்கள் சிறப்பான முறையில் ஆரம்பித்தோம். ஆனால் கூடுதலாக ஒரு விக்கெட்டை இழந்து விட்டோம். தற்போதைய நிலையில் நாங்கள் மோசமாக இருக்கிறோம் என்று கூற மாட்டேன். எங்களிடம் பேட்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தால் நாங்கள் நல்ல நிலைக்கு வந்து விடுவோம். எனவே இந்த நேரத்தில் போட்டி இரண்டு அணிகளுக்கும் சமமாகத்தான் இருக்கிறது”

இதையும் படிங்க : டி20 WC.. அந்த ஒரு தருணம்.. நானே என் நாட்டை தோற்கடித்த மாதிரி இருந்துச்சு – தென் ஆப்பிரிக்க அணி மில்லர் உருக்கம்

“மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்படுவது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. முதல் நாளில் பெரிய சிரமங்களுக்கு பிறகு பேட்டிங் செய்ய வந்தோம். ஆனால் அதற்குப் பிறகும் ஆட்டம் தடைப்பட்டு நின்று விட்டது. இன்றும்ஆட்டம் நடக்கவில்லை. இது ஒட்டுமொத்தமாக வீரர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லைதான். ஆனால் போட்டி கொஞ்சம் நடந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -