நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதின் காரணமாக பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும் இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்கிறது.
பாகிஸ்தான் வெற்றி முடிந்து போன கதை
பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறோம். இது எங்கள் நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. ஆனால் அந்த வெற்றி கடந்த காலத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரு புதிய தொடரை விளையாட இங்கு வந்திருக்கிறோம். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும் என்று எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் நம்புகிறது.
நாங்கள் இந்த தொடரின் முடிவை பற்றி கவலைப்படவில்லை. எங்களுடைய செயல்முறைகளை பின்பற்றவே முயற்சி செய்கிறோம். இந்தியா மிகவும் தரமான அணி. அவர்கள் பேட்டிங் பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் கண்டிஷன் மற்றும் எதிரணி குறித்து சிந்திக்கவில்லை எங்களைக் குறித்து சிந்திக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இரண்டு போட்டிகளையும் வெல்ல விளையாடுவோம்
இந்த நிலையில் இந்தியாவிற்கு கிளம்புவதற்கு முன்பாக பங்களாதேஷில் இருந்து பேசும்பொழுது இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளையுமே வெல்வதற்கு விளையாடுவோம் என்றும் பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறியிருந்தார்.
இதையும் படிங்க : நியூசி டெஸ்ட்.. இலங்கை அணி ரன் குவிப்பு.. கமிந்து மெண்டிஸ் அபார சதம்.. இந்திய அணிக்கு சாதகம்.. முதல் நாள் முடிவுகள்
இத்துடன் ஐந்து நாட்களும் விளையாடி கடைசியில் யார் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்களே வெல்வார்கள் எனவும், கடைசி நாளில் போட்டியை கையில் வைத்திருப்போம் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பேசியிருக்கும் நஜ்முல் சாந்தோ போட்டியின் முடிவைப் பற்றியும் எதிரணி பற்றியும் கவலைப்படவில்லை என மாற்றி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.