இன்று இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த தொடரை முழுவதுமாக இழந்தது. இந்த தோல்விக்கு பிறகு பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசியிருக்கிறார்.
பங்களாதேஷ் அணி இந்தியா வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றார்கள். இதன் காரணமாக இந்திய மண்ணில் ஏதாவது சாதிக்க முடியும் என்று வந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை இந்திய அணி கொடுத்தது. இந்த நிலையில் கடைசி டி20 போட்டிகள் ஆறுதல் வெற்றி பெற அவர்கள் விரும்பினார்கள்.
மோசமான பீல்டிங் மற்றும் பந்துவீச்சு
இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் இருவரும் சேர்ந்து நொறுக்கி தள்ளி விட்டார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி வெறும் 72 பந்தில் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சஞ்சு சாம்சன் 47 பந்து 111 ரன்கள் எடுக்க, சூரியகுமார் யாதவ் 35 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு கேப்டன் நஜ்முல் சாந்தோ 11 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தவ்ஹீத் கிரிதாய் இறுதிவரை ஆட்டமிழகாமல் 42 பந்தில் 63 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து 7 இழப்புக்கு எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஸ் செய்தது.
வெறும் 2 ஓவர் கூட செய்யல
தோல்வி குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசும் பொழுது “நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. மேலும் எங்கள் பேட்டிங் யூனிட் திட்டங்களை செயல்படுத்தவில்லை. கடந்த போட்டிகளில் இரண்டு ஓவர்கள் ஆவது சிறப்பான முறையில் பந்து வீசி இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் அதையும் செய்யவில்லை. எந்த அணியையும் எதிர்த்து போராட முடியும் என்கின்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 5 சிக்ஸர்கள் அடிக்க அப்ப இருந்தே முயற்சி செய்றேன்.. ஆனா ஒரு விஷயம் வெறுப்பா இருந்தது – சஞ்சு சாம்சன் பேட்டி
“நாங்கள் எங்கள் நாட்டில் ஆடுகளங்களை மாற்றியே ஆக வேண்டும். மேலும் வீரர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிட்டிவான விஷயம் என்றால் தவ்ஹீத் ஹ்ரிடாய் விளையாடியதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. எங்களுடைய சீமர்கள் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதை பார்க்க நன்றாக இருக்கிறது. எங்களின் டாப் ஆர்டர்கள் இன்னும் முன்னேற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






