டெஸ்ட் கிரிக்கெட்டில் 546 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பங்களாதேஷ் மூன்றாவது உலகச்சாதனை!

0
1979
Banvsafg

ஆப்கானிஸ்தான அணி பங்களாதேஷ் நாட்டிற்கு வந்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆப்கானிஸ்தான் பந்து வீசியது. பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸில் நஜிபுல் ஹுசைன் சாந்தோ (146) அதிரடி சதத்தில் 382 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் நிஜாத் மசூத் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்களில் சுருண்டது. பங்களாதேஷ் அணியின் இபாதத் ஹுசைன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேற்கொண்டு தனது இரண்டாவது இன்னிசை விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் நஜிபுல் ஹுசைன் சாந்தோ (124) சதம் அடித்து அசத்தினார். பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி 600 ரன்களுக்கு மேற்பட்ட மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடி 115 ரன்களுக்கு சுருண்டு 546 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பங்களாதேஷ் தரப்பில் டஸ்கின் அகமத் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணியை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய ரன் வித்தியாசம் ஆகும்.

இதற்கு முன்பு 1928 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி 675 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே தற்பொழுது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாதனையாக இருந்து வருகிறது.

இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் 1934 ஆம் வருடம் ஆஸ்திரேலியா அணி ஓவல் மைதானத்தில் வைத்து இங்கிலாந்து அணியை 562 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!