பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சில முக்கியமான மாற்றங்களை செய்து இங்கிலாந்து பிளேயிங் லெவன் அதிரடியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி அதிரடியாக 152 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிக சமன் செய்திருக்கிறது.
இந்திய அணிக்கு போட்ட அதே ரூட்
பாகிஸ்தான் அணி உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் தார் ரோடு போன்ற ஆடுகளத்தை அமைத்து தோல்வியை அடைந்து வந்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் இதே முறையில் தோல்வி அடைந்திருந்தது. தற்பொழுது தங்களது திட்டத்தை மாற்றிக் கொண்டு சுழல் பதிச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியும் தங்களது திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளர் என்று களம் இறங்கிய திட்டத்துடன் தற்பொழுது பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டிலும் களம் இறங்க இருக்கிறது. இந்த அணியில் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக பென் ஸ்டோக்ஸ் தேவைப்படும் பொழுது பந்துவீச்சு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் இரண்டு முக்கிய மாற்றங்கள்
தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் திரும்பி இருக்கிறார். மேலும் மூன்றாவது சுழல் பந்துவீச்சாளராக லெக் ஸ்பின்னர் ரேஹான் அகமத் திரும்பி வந்திருக்கிறார். மற்றபடி பழைய இங்கிலாந்து பிளேயிங் லெவன் தொடர்கிறது.
இதையும் படிங்க : பிரச்சினை இருப்பது உண்மை.. அடுத்த டெஸ்ட்க்கு கில் வந்தா.. 2 பேர்ல அவர் வெளிய போவாரு – இந்திய உதவி கோச் மறைமுக தகவல்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :
சாக் கிராலி
பென் டக்கெட்
ஒல்லி போப்
ஜோ ரூட் போப்
ஹாரி புரூக்
பென் ஸ்டோக்ஸ் (கே)
ஜேமி ஸ்மித் (வி.கீ)
கஸ் அட்கின்சன்
ஜாக் லீச்
ரெஹான் அகமது
சோயப் பஷீர்






