இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பந்துவீச்சில் மிக அபாரமாக செயல்பட்டு ஏறக்குறைய வெற்றியை நோக்கி மிகவும் முன்னேறி இருக்கிறது.
நேற்று முதல் நாள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இன்று இரண்டாவது நாளில் 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மக்முத் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
சிறிய வாய்ப்பில் பெரிய சரிவு
இந்த நிலையில் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாட வந்தது. முதல் ஓவரை வீசிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசிப் பந்தில் துவக்க ஆட்டக்காரர் ஷத்மன் இஸ்லாம் விக்கட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து பந்து வீச வந்த ஆகாஷ் தீப் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜாஹிர் ஹசன் விக்கெட்டை கைப்பற்றினார். உடனே அடுத்த பந்தில் மொமினுல் ஹக்கை கோல்டன் டக் அடிக்க வைத்து வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி பங்களாதேஷ் 26 ரன்கள் எடுத்திருக்க மூன்று விக்கெட்டை கைப்பற்றியது.
இரண்டாவது செஷனில் ஏற்பட்ட இழப்பு
இதைத்தொடர்ந்து மதிய உணவுக்குப் பிறகு பங்களாதேஷ் அணி விளையாட வந்தது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ 20 சிராஜ் கைப்பற்றினார். முஷ்பிக்யூர் ரஹீம் 8 விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து லிட்டன் தாஸ் 22, ஷாகிப் அல் ஹசன் 32 விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா எடுத்தார்.மீண்டும் அந்த பும்ரா ஹசன் மக்முத்தை வெளியேற்றினார். பங்களாதேஷனை தேநீர் இடைவேளையின் போது 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியை வென்று வந்த காரணத்தினால் பங்களாதேஷ் தரப்பிலிருந்து இரண்டு போட்டிகளையும் வெல்வோம் என பங்களாதேஷ் கேப்டனே பேசியிருந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பான பதிலடியை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க : அஸ்வினை தப்பா கணக்கு போடறாங்க.. இந்த 3 விஷயத்தை பார்த்தா புரியும் – பங்களாதேஷ் தமிம் இக்பால் பேட்டி
சென்னையில் போட்டி நடக்கின்ற காரணத்தினால் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டுகளுக்காக வேகப்பந்துவீச்சாளர்களை நெருக்கடி கொடுத்து தள்ளாமல், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களையும் சீக்கிரமாகவே எடுத்து வந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்தார். இந்திய அணி அடுத்த தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களை சிறப்பான முறையில் பாதுகாத்தார்.