பங்களாதேஷை பந்துவீச்சில் பொட்டலம் கட்டிய உமேஷ் யாதவ் அஸ்வின்!

0
333
ICT

இந்திய அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்களில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. இதற்கு அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மிர்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த போட்டியில் பேட்டிங்கில் 40 ரன்கள் எடுத்து பந்துவீச்சில் எட்டு விக்கட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு உனட்கட் சேர்க்கப்பட்டார்!

பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்யும்பொழுது அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டே வருவதாகத்தான் தெரிந்தது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தன் அனுபவத்தின் மூலம் இந்திய அணிக்கு எப்பொழுதெல்லாம் விக்கட் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தலையிட்டு விக்கட்டை எடுத்துக் கொடுத்து பங்களாதேஷ் அணி எழுச்சி பெறுவதை தடுத்துக் கொண்டே வந்தார்.

இதேபோல் 12 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த உனட்கட் ஆரம்பத்தில் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தி நல்ல துவக்கத்தைத் தந்தார். இவரோடு சேர்ந்து நடுவிலும் இறுதியிலும் இரண்டு, இரண்டு என நான்கு விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி பலம் சேர்த்தார்.

- Advertisement -

பங்களாதேஷ அணி 73.5 ஓவர்களில் இறுதியில் 10 விக்கட்டுகளையும் இழந்து 227 இரங்கல் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மொமினூல் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் உனட்கட் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதை அடுத்து தற்பொழுது இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது!