BAN vs NZ.. 15 ஆண்டுகளுக்கு பின் சாதித்த நியூஸி.. பிரச்சனையில் சிக்கிய பங்களாதேஷ்.. என்ன நடக்கிறது!

0
1944
Bangladesh

தற்பொழுது பங்களாதேஷில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது!

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை நியூசிலாந்து வென்று இருந்த நிலையில் மற்றுமொரு போட்டி மழையால் கைவிடப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங் ஆர்டரில் மூன்றாவதாக வந்த நஜிபுல் ஹூசைன் சாந்தோ மட்டும் தாக்குப் பிடித்து 84 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். மகமதுல்லா 21 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் இருவது ரன்களை தொடவில்லை.

பங்களாதேஷ் அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தி வரும் வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷன் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு
துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் வில் எங் மிகச் சிறப்பாக விளையாடி 80 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். பாக்ஸ்கிராப்ட் முதல் பந்தில் ரன் இல்லாமல் வெளியேறினார்.

களத்தில் உறுதியாக நின்ற ஹென்றி நிக்கோலஸ் 86 பந்துகளில் 50 ரன்கள், டாம் ப்ளுண்டல் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க, நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில் இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. பங்களாதேஷில் நியூசிலாந்து அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் தற்பொழுது முன்னாள் கேப்டன், முன்னணி ஆட்டக்காரர் தமிம் இக்பால் விளையாடுவது தொடர்பாக பங்களாதேஷ் அணியில் உள் பிரச்சனைகள் நிறைய சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் ஆசிய கோப்பைக்கு கேப்டனாக இருந்த சகிப் அல் ஹசன் இடம் பெறவில்லை.

இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக பெரிய அணிகளை எல்லாம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சொந்த நாட்டில் வீழ்த்தி வந்த பங்களாதேஷ், சமீபத்தில் ஆப்கானிஸ்தான், தற்பொழுது நியூசிலாந்து என ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது!