பேர்ஸ்டோ அடுத்தடுத்து 2 சதம் ; மறுபக்கம் ஜோ ரூட் அபார சதம் ! 378 ரன்கள் சேஸ் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ள இங்கிலாந்து

0
82

இந்திய அணி இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் கடந்த ஆண்டு கோவிட்டால் தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பஸ்டன் நகரில் கடந்த 1ஆம் தேதி முதல் விளையாடி வந்தது. இன்று இந்தப் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது!

முதலில் பேட் செய்த இந்திய அணி ரிஷாப் பண்ட் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. ஜேம்ஸ் ஆன்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து விளையாடி இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவின் சதத்தோடு 284 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தது. மொகம்மத் சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 132 ரன்கள் முன்னிலையோடு விளையாடிய இந்திய அணியில் ரிஷாப் பண்ட் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் நல்ல பங்களிப்பைத் தராததால் 245 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 378 என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்கள் நூறு ரன் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். அடுத்து உடனுக்குடன் மூன்று விக்கெட்டுகள் சரிய ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தின் வெளிப்படுத்தி சதம் விளாசி, இறுதிவரை ஆட்டமிழக்காமல், இங்கிலாந்து அணியை வெற்றிபெற வைத்தார்கள். இருவரும் 269 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுக் குறிப்பிடத்தக்கது!

இந்தப் போட்டியில் ஜானி பேர்ஸ்டோ இரு இன்னிங்ஸிலும் சதமடித்தார். 2008ஆம் ஆண்டு ஆன்ட்ரூ ஸ்டிராஸ் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததிற்குப் பிறகு இப்பொழுதுதான் இது நிகழ்ந்திருக்கிறது. இது ஜானி பேர்ஸ்டோவிற்குத் தொடர்ச்சியான நான்காவது டெஸ்ட் சதமாகும். இந்த வருடத்தில் அவருக்கு ஆறாவது டெஸ்ட் சதமாகும்.

மேலும் இந்தியாவின் இந்த தோல்வி, இங்கிலாந்தின் இந்த வெற்றியின் மூலம் முதன் முதலாக சில நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக தோற்று இருக்கிறது.
இதுவே இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் துரத்தலாம அமைந்துள்ளது. இங்கிலாந்து மண்ணில் இரண்டாவது பெரிய ரன் துரத்தலாக இது அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணி முதன்முதலாக தொடர்ந்து 250+ ரன்களுக்கு மேல் தொடர்ந்து நான்கு முறை இலக்கை துரத்தி வென்றிருக்கிறது!