வருத்தமா இருக்கு.. இந்திய மைதானங்களில் ஒரு பிரச்சனை இருக்கு.. பாபர் அசாம் உலக கோப்பைக்கு முன் பேட்டி.!

0
18247

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக ஏழு வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியா வந்திருக்கிறது. கடந்த வாரம் துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த பாகிஸ்தான் அணி வீரர்கள் அங்கு தங்கி இருந்து பயிற்சி ஆட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளையும் ஹைதராபாத்தில் வைத்து விளையாட இருக்கிறது.

அக்டோபர் ஆறாம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியுடனும் பத்தாம் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை அணியுடனும் மோத இருக்கிறது. ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட உற்சாகமான வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியை பாகிஸ்தான் வீரர்கள் பகிர்ந்திருந்தனர். மேலும் ஹைதராபாதின் புகழ் பெற்ற பிரியாணி குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஹைதராபாத் பிரியாணி தனது எதிர்பார்ப்பை விட மிகவும் நன்றாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு தங்கள் நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வந்தது போல் தெரியவில்லை என்றும் இந்திய மக்களின் அன்பினால் தங்கள் சொந்த நாட்டில் இருப்பதாகவே உணர்வதாகவும் தெரிவித்திருக்கிறார் பாபர் அசாம்.

போட்டி துவங்குவதற்கு முன்பாக நேற்று நடைபெற்ற கேப்டன்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர்” இந்திய மக்களின் உபசரிப்பு மிகவும் எதிர்பார்க்காத வகையில் அற்புதமாக இருந்ததாக தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருவதாக கூறிய அவர் நாங்கள் வேறு நாட்டில் இருப்பதைப் போல் உணரவில்லை அந்த அளவிற்கு இந்திய மக்கள் எங்களின் மீது அன்பு காட்டுகிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய பாபர்” ஹைதராபாத்தில் புகழ்பெற்ற பிரியாணியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அதனை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹைதராபாத் பிரியாணி மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் உலகக்கோப்பை நடைபெறும் சில மைதானங்களில் இருக்கக்கூடிய எல்லை கோடுகள் தான் மிகவும் சிறியதாக இருக்கிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளவர்கள் என தெரிவித்திருக்கிறார் பாபர்.

- Advertisement -

இது குறித்து விரிவாக பேசி இருக்கும் அவர்” எல்லைக்கோடு சிறியதாக இருப்பது பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. அவர்கள் ஏதேனும் சிறிய தவறு செய்தால் கூட அதனை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தி அதிக ரன்களை குவிப்பார்கள் . இதனால் இந்த உலகக் கோப்பை தொடரில் வீரர்கள் அதிக ரன்களை குவிப்பதை காணலாம் எனக் கூறினார்.

மேலும் கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக ஒரே அணியுடன் விளையாடி வருவதால் தங்களது அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பது இந்த உலகக் கோப்பையில் கை கொடுக்கும் என தெரிவித்திருக்கிறார். நசிம் ஷா காயமடைந்தது மிகப்பெரிய இழப்பு என்றாலும் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிவித்த பாபர் அசாம் வந்து வீச்சு தான் தங்களது முக்கியமான பலம் என்றும் கூறினார்.