தார் ரோடு பிட்ச்ல.. பாபர் அசாம் செய்ததை ஏற்கவே முடியாது.. இன்னும் 2 பேர் ரொம்ப மோசம் – பசித் அலி விமர்சனம்

0
77
Basit

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் பாபர் அசாம் அப்துல்லா ஷபிக் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது இந்த போட்டியில் பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தார் ரோடு எனவும், கெவின் பீட்டர்சன் பவுலர்களின் கல்லறை எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்று வீரர்களின் மெதுவான ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் 177 பந்துகள் மட்டுமே சந்தித்து 151 ரன் எடுத்தார். அதே சமயத்தில் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வந்த ஆகா சல்மான் அதிரடியாக விளையாடி 119 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 184 பந்தில் 102 ரன்கள், பாபர் அசாம் 71 பந்தில் 30 ரன், சவுத் ஷகீல் 177 பந்தில் 82 ரன் என பேட்டிங் செய்வதற்காக சாதகமான ஆடுகளத்தில் மிகவும் மெதுவாக விளையாடினார்கள். இதன் காரணமாக 4.50 க்கு மேல் இருந்த ரன் ரேட் பிறகு 3.50 என்ற அளவுக்கு குறைந்தது.

- Advertisement -

இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆடுகளம் போல் காட்டினார்கள்

இது குறித்து விமர்சனம் செய்துள்ள பசித் அலி கூறும் பொழுது “அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் மற்றும் சவுத் ஷகீல் மூன்று பேரும் ஏதோ இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கொடுக்கப்படும் கடினமான ஆடுகளத்தில் விளையாடுவதை போல எங்களுக்கு காட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஆடுகளத்திற்கு தகுந்தது போல் விளையாடவில்லை. மேலும் தங்களுடைய ரன்களுக்காக மட்டுமே அவர்கள் விளையாடினார்கள்”

இதையும் படிங்க : சொன்னதை செய்த முகமத் ஷமி.. இரண்டு தொடர்களிலும் பெயர் இல்லை.. ஆஸிக்கு திட்டம் இருக்கா?

“அதே சமயத்தில் எங்கள் கேப்டன் ஷான் மசூத் 177 பந்துகள் விளையாடி 151 ரன்கள் எடுத்தார். மிகக் குறிப்பாக ஆகா சல்மான் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வந்து அதிரடியாக சதம் அடித்தார். எட்டாவது இடத்தில் வந்து சதம் அடிப்பது பெரிய சாதனையாகும். ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்ப கட்டத்தில் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் மற்றும் வாட்சன் போன்ற பெரிய ஜாம்பவான் வீரர்கள் ஆறாவது இடத்திற்கு கீழ்தான் விளையாடினார்கள். ஆகா சல்மான் இலங்கை தொடரிலும் கீழே விளையாடி சிறப்பாக செயல்பட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -