பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பார்முக்கு திரும்பிய பாபர் அசாமுக்கு மீண்டும் தவறு செய்வதாக பசித் அலி குற்றம் சாட்டி இருக்கிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு அதிகபட்ச சாதகத்தை கொடுப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
முக்கியத்துவம் இல்லாத தொடர்
தற்போது நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. எனவே பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தான் இழந்திருந்த பார்மை மீண்டும் கண்டுபிடித்து நல்ல நிலைமைக்கு திரும்பினார். ஆனால் தற்போது உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினார். சுழலுக்கு அதிகபட்ச சாதகத்தை கொடுக்கும் ஆடுகளத்தில் அவரால் விளையாட முடியவில்லை.
பாபர் அசாமுக்கு நடப்பது தவறு
இதுகுறித்து பசித் அலி பேசும் பொழுது “பாபர் அசாம் தென் ஆப்பிரிக்காவில் வைத்து தன்னுடைய ரிதத்தை கண்டுபிடித்த பிறகு மீண்டும் நீங்கள் அவருக்கு தவறு செய்து கொண்டிருக்கிறீர்கள். தற்போது பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப் போகிறதா? இப்படி இருக்கும் பொழுது எதற்காக பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் பாபர் அசாமை விளையாட வைத்து அவரது நம்பிக்கையை அழிக்க வேண்டும். நீங்கள் அவரை விளையாட வைக்க விரும்பினால் நல்ல ஆடுகளத்தில் விளையாட வையுங்கள்”
இதையும் படிங்க: இனி இந்த விஷயத்திற்கு சஞ்சு சாம்சன்தான்.. சூரியகுமார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
“பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் விளையாடி அவர்கள் தங்கள் விக்கெட்டுகளை இழந்தால் நம்பிக்கை அழியும். தென் ஆப்பிரிக்காவில் பாபர் சிறந்த முறையில் விளையாடிய அவர் பார்மை மீட்டெடுத்து இருந்தார். அவரது நம்பிக்கையை நாம் அப்படியே தொடர செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






