சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே இருக்கும் இடைவெளியை குறைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஸ்டாலியன்ஸ் மற்றும் லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாபர் அசாமின் அபாரமான ஆட்டத்தால் ஸ்டாலியன்ஸ் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஒரு நாள் வடிவத்தொடராக நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஐந்து அணிகளும் மற்ற அணிகளோடு தலா ஒரு முறை மோதும். இதில் லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கும், அதில் தோல்வி அடையும் அணி மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகளில் வெற்றி பெறும் அணியோடு மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி பைசாலபாத்தில் நடைபெற்ற நிலையில் முகமது ஹாரிஸ் தலைமையிலான ஸ்டாலியன் அணியும் ஷாகின் ஷா அப்ரிடி தலைமையிலான லயன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்டாலியன்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 41 ரன்கள் குவிக்க, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 79 பந்துகளில் ஆறு பவுண்டரியுடன் 76 ரன்கள் குவித்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லயன்ஸ் அணியின் கேப்டன் அப்ரிடி அவரை சதத்தை நெருங்க விடாமல் 76 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். அதற்குப் பிறகு டையப் தாஹிர் 74 ரன்களும், கேப்டன் ஹாரிஸ் 55 ரன்கள், உசைன் டாலெட் 50 ரன்கள் குவித்தனர் அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி லயன்ஸ் அணி களம் இறங்கியது.
இதில் ஸ்டாலின்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சால் 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே குவித்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ஹாரிஸ் ராப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டாலின்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: இந்திய டீம்ல என் முதல் வேலை இதுதான்.. நான் இந்த மாதிரி தான் வேலை செய்ய போறேன் – பவுலிங் கோச் மோர்கல் பேட்டி
இதில் குறிப்பாக ஸ்டாலின்ஸ் அணியின் பாபர் அசாம் பேட்டிங்கில் திரும்பவும் ஃபார்மிற்கு வந்தது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக அவரது பேட்டிங் சொதப்பலாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரது ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.