இந்திய டீம்ல என் முதல் வேலை இதுதான்.. நான் இந்த மாதிரி தான் வேலை செய்ய போறேன் – பவுலிங் கோச் மோர்கல் பேட்டி

0
770

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கல் இந்திய அணியோடு இணைந்தார்.

வங்கதேச அணிக்கு எதிராக முதல் தொடரில் இந்திய அணியோடு இணைந்து பணியாற்ற இருப்பதால் இந்த தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று முடித்த பிறகு ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு பயிற்சியாளர் மற்றும் ஏனைய பதவிகளில் இருந்து விலகியதை தொடர்ந்து அதற்குப் பிறகு கௌதம் கம்பீர் தலைமையிலான புதிய பயிற்சியாளர் குழு பயிற்சியாளர் பதவிகளை கவனித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கம்பீர் மற்றும் சில பயிற்சியாளர்கள் ஏற்கனவே பொறுப்பை ஏற்று வழிநடத்தி வரும் நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் மோர்னே மோர்கள் வங்கதேச தொடருக்கு முன்பாக இந்திய அணியில் இணைந்தார்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் லக்னோ அணியோடு கௌதம் கம்பியுடன் இணைந்து பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவம் இந்திய அணியை வழிநடத்த பெரிதாக கை கொடுக்கும். மேலும் இந்திய வீரர்களின் தொழில் முறை சிறப்பாக இருப்பதாகவும், இந்திய அணி சிறந்த வெற்றிகளை பெற உதவப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் தற்போது இங்கு இருக்கும் அமைப்பில் இந்திய அணியுடன் சிறந்த பயணத்தையும் நேரத்தையும் எதிர்பார்த்து இருக்கிறேன். என்னை பொருத்தவரை இந்திய அணி வீரர்களோடு சிறந்த பிணைப்பில் இருப்பது மிகவும் முக்கியம். நான் தற்போது பார்த்த சில வீரர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். மேலும் ஐபிஎல் தொடர் மூலமாக சிறந்த நட்பிலும் இருந்து இருக்கிறேன். இப்போது இந்திய முகாமில் சிறந்த நட்புகளையும், உறவுகளையும் உருவாக்குவதே முக்கியமாக பார்க்கிறேன்.

இன்று நடத்திய உரையாடலின் குறிக்கோள் என்னவென்றால் வீரர்கள் அவர்களது பலம் மற்றும் பலவீனங்களின் புரிதலை பெற்று சிறிய விதைகளை ஊன்றுவதன் மூலமாக இனி வரப் போகும் எதிர்காலத் தொடர்களுக்கு பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்பதே ஆகும். நான் இந்திய அணியில் இணைந்ததும் வீரர்களை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

இதையும் படிங்க:ஸ்ரேயாஸ் ஐயருக்கு கோலினு மனசுல நெனப்பு.. நான் தலைவரா இருந்தா அவர் விளையாடவே மாட்டார் – பாசித் அலி காட்டமான கருத்து

அவர்கள் தொழில்முறையில் பக்தியாக இருந்து சில விஷயங்களை செய்வது நல்ல அறிகுறியாக தெரிந்தது. இதன் மூலம் நல்ல அஸ்திவாரத்தை கட்டி எழுப்ப முடியும்.திறமைகளை வளர்த்து, சிறந்த தரத்திற்கு உயர்த்தி சவாலை ஏற்பதற்கு தயாராக இருப்பது அவசியம். எனக்கு புரிகிறது எப்போதுமே வெற்றி பெறுவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை அறிவேன். அதிர்ஷ்டவசமாக நான் விளையாடிய நாட்களில் அதை அனுபவித்திருப்பதால் அந்த அறிவை இங்கு பகிர்ந்து கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -