இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்கு தன்மானம் இருக்கு.. ஆனா எங்க பாபருக்கு அது இல்லை.. அதான் கேவலமா ஆயிடுச்சு – பசித் அலி பேச்சு

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் விராட் கோலி செய்த ஒன்றை செய்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்தார். மேலும் ஒரு போட்டியில் மேலே நல்ல துவக்கம் கிடைத்து இருந்த நிலையில் அவர் நான்காவது இடத்திலும் விளையாட வைக்கப்படவில்லை.

உங்களுக்கு அதிகாரம் இல்லையா?

பொதுவாக பாபர் அசாம் துவக்க ஆட்டக்காரராகவோ இல்லை மூன்றாவது இடத்திலோ வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட கூடியவர். மேலும் அவர் பெரிய ஷாட் இல்லாதவர். இப்படிப்பட்ட ஒருத்தரை பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் அனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பசித் அலி பேசும் போது “பாபர் அசாம் மற்றும் பகார் ஜமான் தங்களுக்கு என குரல் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்து விளையாட ஒத்துக் கொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை”

- Advertisement -

விராட் கோலி செய்தார்

“இறுதியாக விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்து அந்தத் தொடரில் அவர் ஒரு வீரராகவாவது விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது”

இதையும் படிங்க: எல்லாரும் அபிஷேக் பெயரைதான் கத்துவாங்க.. எங்களுக்கு பொறாமையா இருந்தது – சஞ்சு சாம்சன் பேட்டி

“இந்த நிலையில்தான் அவர் பிசிசிஐ தன்னை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக மீண்டும் அறிவிக்காததால் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் பாபர் அசாம் தன்னுடைய எதிர்ப்பை எந்த விதத்திலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணத்தால் தான் அவரை அணியின் பேருந்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts