எல்லாரும் அபிஷேக் பெயரைதான் கத்துவாங்க.. எங்களுக்கு பொறாமையா இருந்தது – சஞ்சு சாம்சன் பேட்டி

0
11
Sanju

இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மாவுக்கு ரசிகர்களிடம் கிடைத்த ஆதரவால் வீரர்கள் பொறாமைப்பட்டார்கள் என நகைச்சுவையாக சஞ்சு சாம்சன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்தவராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அதே சமயத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா இறுதிப் போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

பொறாமையாக பார்த்தார்கள்

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மா பிரபல்யம் குறித்து மிகவும் நகைச்சுவையான முறையில் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “முன்பெல்லாம் அபிஷேக் சர்மாவுக்கு ரசிகர்களிடமிருந்து நிறைய உற்சாக குரல்கள் வருவதை பார்த்து எங்களுடைய வீரர்கள் பொறாமைப்படுவார்கள். எல்லா இடங்களிலும் அபிஷேக் அபிஷேக் என்றுதான் குரல்கள் கேட்கிறது, ரசிகர்கள் வேறு யாரையும் பார்ப்பார்களா இல்லையா என்று நினைப்போம். இப்போது அவர் அணியின் சூப்பர் ஸ்டார். அபிஷேக் பாய் சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அபிஷேக் சர்மா பதில்

இதே நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் சர்மா கூறும் பொழுது “வெளிப்படையாக என்னுடைய இறுதி இலக்கு இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடுவதுதான். ஆனால் அது என் கையில் இல்லாததால் நான் அது குறித்து சிந்திப்பதை விட்டு விட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவராஜ் சிங் பாய் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்களை பின்பற்றுகிறேன்”

இதையும் படிங்க : இந்த ஒரு வேலையை செஞ்சாலே.. கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவார்னு ரசிகர்கள் நினைக்கிறாங்க.. ஆனா அது தப்பு – இர்பான் தான்

“நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் இதுதான். என் கையில் ஒரு விஷயம் இல்லை என்றால் அது குறித்து நான் கவலைப்பட கூடாது. இப்போது விளையாடும் வடிவத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். எனக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவேன். அது என்னுடைய நீண்ட நாள் கனவு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -