சர்வதேச டி20ல் விராட்கோலியின் சாதனையை சமன்செய்தார் பாபர் அசாம்!

0
186

டி20 போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை அடித்து விராட்கோலியின் சாதனையை சமன்செய்திருக்கிறார் பாபர் அசாம்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் ஏழு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளுடன் தொடரில் சம நிலையில் உள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆறாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் விலாசினார். அப்போது சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்கள் கடந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் விராட் கோலியின் அதிவேக 3000 ரன்கள் சாதனையை சமன் செய்தார்.

இருவரும் 81 இன்னிங்சில் இந்த மைல்கல்லை கடந்திருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்கள் மைல்கல்லை கடந்த எட்டாவது வீரராகவும், ஆண்கள் கிரிக்கெட் மத்தியில் ஐந்தாவது வீரராகவும் பாபர் அசாம் இதனை செய்து முடித்திருக்கிறார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே மூவாயிரம் ரன்களை கடந்து இருக்கின்றனர். அடுத்ததாக மார்ட்டின் கப்தில் மற்றும் பால் ஸ்டெர்லிங் ஆகிய இருவரும் இந்த 3000 ரன்களை கடந்திருக்கின்றனர். தற்போது பாபர் அசாம் ஐந்தாவது வீரராக இதனை செய்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவர் மட்டுமே 100 இன்னிங்ஸ்களுக்கும் குறைவாக எடுத்துக் கொண்டு, இந்த இலக்கை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் சுசி பேட்ஸ், மேக் லேனிங் மற்றும் ஸ்டெபானி டைலர் ஆகிய மூவரும் இந்த 3000 ரன்கள் இலக்கை கடந்திருக்கின்றனர்.

மேலும் பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் 3000 ரன்கள்களை கடந்த முதல் வீரராக பாபர் அசாம் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 2514 ரன்கள் உடன் முகமது ஹபீஸ் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருக்கும் பிஸ்மா மரூப் 2388 ரன்கள் அடித்துள்ளார். மேலும் சோயப் மாலிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவர் மட்டுமே 2000 ரன்களைக் கடந்த மற்ற பாகிஸ்தான் வீரர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

பாகிஸ்தான் – இங்கிலாந்து: 6வது டி20 போட்டி சுருக்கம்:

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆறாவது டி20 போட்டியின் முடிவில் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி. இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு சால்ட் 41 பந்துகளில் 88 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 14.3 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 7 போட்டிகள் கொண்ட தொடரை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தது.

இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் கடைசி மற்றும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி லாகூர் மைதானத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி நடைபெறுகிறது.