தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மன்கட் விதி முறையை பயன்படுத்தி ஜெகதீசனை ரன் அவுட் செய்து நடையை கட்ட வைத்த பாபா அபராஜித் – வீடியோ இணைப்பு

0
240

இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் இன்று முதல் தொடங்கியது. முதல் போட்டியில் சேபாக் மற்றும் நெல்லை அணிகள் மோதி விளையாடிக் கொண்டிருக்கின்றன. முதலில் விளையாடிய நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. நெல்லை அணியில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.

சற்று கடினமான இலக்கை எதிர்கொண்டு விளையாடிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்து ஸ்கோரை சமன் செய்துள்ளது. சேப்பாக் அணியில் அதிகபட்சமாக கேப்டன் கவுசிக் காந்தி 60 ரன்கள் குவித்தார். தற்பொழுது இரு அணிகளுக்கு இடையே சூப்பர் ஓவர் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மன்கட் விதி முறையை பயன்படுத்தி ஜெகதீசனை அவுட்டாக்கிய பாபா அபராஜித்

மண் கட் விதிமுறை என்பது ஒருவகையான ரன் அவுட் விதிமுறையாகும். பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்முனையில் நின்று கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு ஒரு அடி முன்னேறி சென்றால் அவரை பந்துவீச்சாளர் ரன் அவுட் செய்யலாம்.

இந்த விதிமுறையை பயன்படுத்தி ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்தார். அதுகூட மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளானது. ஆனால் தற்பொழுது ஐசிசி அந்த விதிமுறையை அதிகாரப்பூர்வமாக உள்ளது எனவே அதில் எந்தவித விமர்சனமும் எதிர் கொள்ளத் தேவையில்லை என்று அழுத்தந்திருத்தமாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

15 பந்துகளில் 25 ரன்கள் குவித்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீசனை மண் கட் விதி முறையை பயன்படுத்தி பாபா அபராஜித் இன்று நடந்த போட்டியில் அவுட் ஆக்கி விட்டார். பாபா அபராஜித் தன்னை ரன் அவுட் ஆகியதும் சற்று விரக்தியுடன் ஜெகதீசன் செவுளியன் நோக்கி நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.