வாசிம் அக்ரம் தெரியாம பேசக்கூடாது.. இந்தியா கூட தோத்து நம்பிக்கையே போச்சு – பாக் கோச் அசார் மஹ்மூத் பதிலடி

0
94
Azar

பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கடுத்து இரண்டாவது போட்டியில் வெல்லும் வாய்ப்பில் இருந்து மீண்டும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. தற்பொழுது இந்திய அணிக்கு எதிரான தோல்வி பெரிய ஏமாற்றம் அளிப்பதாக பாகிஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளர் அசார் மஹ்மூத் கூறியிருக்கிறார்.

நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அமெரிக்க அணி தன்னுடைய அடுத்த இரு போட்டிகளிலும் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியடைய வேண்டும். பாகிஸ்தான் அணி தன்னுடைய இரண்டு போட்டியிலும் கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியா நிர்ணயித்த 120 ரன்கள் என்கின்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி 113 ரன்களில் சுருண்டு தோற்றது அந்த அணிக்கு மட்டுமல்லாமல் வெளியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பாபர் அசாம் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோர் பேசிக் கொள்வதில்லை எனவும், இப்படியான வீரர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடுமையாக பேசியிருந்தார்.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் அசார் மஹ்மூத் கூறும்பொழுது “இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு அனைவரும் விரக்தி அடைந்து இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான தோல்வியை விட இந்தியாவுக்கு எதிரான தோல்வி பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. அனைவரின் மன உறுதியையும் மீண்டும் உயர்த்துவது முக்கியம். எங்களால் வெற்றி பெற முடியும் அதுவரை நம்பிக்கையை இழக்கக்கூடாது.

- Advertisement -

எங்கள் ஷாட் தேர்வு சரியாக இல்லை இதன் காரணமாக ஓவருக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். நாங்கள் முதல் 15 ஓவர்கள் வரை பேட்டிங்கில் சிறப்பாக இருந்தோம். நாங்கள் ஒரு அணியாகத் தோற்றோம், எனவே தனி நபர்களை குற்றம் சொல்ல முடியாது. தோல்விக்கு முழு நிர்வாகமும் பொறுப்பாகும்.

இதையும் படிங்க : நீங்க நினைக்கிறது இல்ல.. பும்ரா இதனாலதான் ஸ்பெஷல்.. விக்கெட் வரது இப்படிதான் – ஸ்டெய்ன் பேட்டி

மேலும் வாசிம் அக்ரம் அப்படி சொல்லி இருக்கலாம். எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது. ஆனால் அணியில் பாபர் அசாமும் ஷாகின் அப்ரிடியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் எப்பொழுதும் பேசிக் கொள்வார்கள். அவர்களுக்குள் எந்த விரிசலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -