ஒரே நாளில் 2 சம்பவம்.. ஒரு கேப்டனுக்கு மரியாதை, இன்னொரு கேப்டனுக்கு அவமரியாதை.. என்ன நடந்தது?

ஒரு அணி சிறப்பாக விளையாடுகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம். அணியின் கேப்டனாக தான் இருப்பார்கள். அந்த வகையில் இந்திய அணியின் காலங்காலமாக சிறந்த கேப்டன்களை உருவாக்கி இருக்கிறார்கள். கேப்டன்களை கடவுள் போல் வழிபடும் சமுதாயம் இந்திய நாட்டில் இருக்கிறார்கள்.

- Advertisement -

கபில்தேவ் தொடங்கி தற்போது இருக்கும் ரோகித் சர்மா வரை ஒவ்வொரு கேப்டனுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அல்லது கேப்டன்களுக்கு ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களது மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் அந்த வீரர்களின் பெயரை சூட்டும்.

ரோகித்துக்கு கவுரவம்:

அந்த வகையில் இன்று ரோகித் சர்மாவின் பெயரை மும்பை வான்கடை மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் வைக்கிறார்கள். இது ரோகித் சர்மா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட தொடரை ரோகித் சர்மா கேப்டனாக வென்றுள்ள நிலையில் அவருக்கு உரிய கௌரவம் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நிகரற்ற கேப்டனாக விளங்கியவர் அசாருதீன். இந்தியாவியை 47 டெஸ்ட் போட்டிகளிலும், 174 ஒரு நாள் போட்டிகளிலும் தலைமை தாங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அசாருதீன் டெஸ்ட் போட்டியில் 99 போட்டியில் விளையாடி 6215 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 334 போட்டியில் விளையாடி 9378 ரன்களும் அடித்திருக்கிறார்.

- Advertisement -

அசாரூதீன் பெயர் நீக்கம்:

டெஸ்டில் 22 சதமும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 சதமும் அசாருதீன் அடித்திருக்கிறார் இந்த நிலையில் அசாருதீனின் பெயரை ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஏற்பட்ட அரசியல் காரணங்களால் தற்போது அந்தப் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாரூதீன் “இந்த விஷயத்தில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.”

இதையும் படிங்க: ஒரே நாளில் 2 சம்பவம்.. ஒரு கேப்டனுக்கு மரியாதை, இன்னொரு கேப்டனுக்கு அவமரியாதை.. என்ன நடந்தது?

“அவர்களுடைய நிலைக்கு நானும் தரம் தாழ்ந்த போக விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் வாரியத்தை பார்த்து உலகமே சிரிக்கும். நான் 17 ஆண்டுகளாக ஹைதராபாத் அணிக்காக உழைத்திருக்கின்றேன். பத்து ஆண்டுகள் கேப்டன் ஆகவும் இருந்திருக்கின்றேன். ஆனால் உங்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை இப்படித்தான் நீங்கள் அவமதிப்பீர்களா? இது மிகவும் சோகமான விஷயம். இது எதிர்த்து நான் நீதிமன்றத்திற்கு செல்ல போகிறேன்” என்று அசாருதீன் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by