நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மத்ரே இத்தனை தோனி போட்டிக்கு பிறகு எப்படி அழைத்து பாராட்டினார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் 214 ரன்கள் நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு இளம் தொடக்க வலதுகை பேட்ஸ்மேன் ஆயுஸ் மத்ரே 48 பந்தில் 94 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்கான மிக்க சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அடுத்து வந்தவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளாததால் இறுதியாக இரண்டு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
சிறுவன் தந்த நம்பிக்கை
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிக மோசமானதாக அமைந்திருக்கிறது. அந்த அணி உருவாக்கி வைத்திருந்த பல வரலாற்று சம்பவங்கள் அனைத்தும் தற்பொழுது தவிடுபொடி ஆகி வருகிறது. ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு சிறந்த சாதனை படைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் போலவே நீண்ட ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வீரர் இந்த சீசனில் ஆயுஸ் மத்ரே கிடைத்திருக்கிறார். நேற்று அவர் பெரிய இலக்கை நோக்கி அதிரடியாக விளையாடியதுடன், பவுலர்களை சரியான இடங்களுக்கு குறி வைத்து அடித்து இன்னிங்சை நகர்த்திச் சென்ற விதம் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தது. அவர் பேட்டிங் தொழில்நுட்ப ரீதியாகவும் வலிமையாக இருக்கிறார். இதன் காரணத்தால் அவர் சிஎஸ்கே அணியில் எதிர்காலத் தூணாக இப்பொழுதே கருதப்படுகிறார்.
தோனி இப்படித்தான் அழைத்தார்
சிஎஸ்கே அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே இவரை பரிசோதனைக்காக அழைத்தது. இவரும் கலந்துகொண்டு பயிற்சியில் விளையாடிக் காட்டிவிட்டு சென்றார். ஆனால் மிகப் பெரும் தவறாக சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை மெகா ஏலத்தில் வாங்காமல் விட்டது. நல்ல வேலையாக வேறு எந்த அணி நிர்வாகமும் வாங்காததால் மீண்டும் வாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது.
இதையும் படிங்க : கடைசி 17 பந்து 55 ரன்.. தோனி கெயிலை தாண்டி ரசல் மிரட்டல் சாதனை.. தீக்சனாவுக்கு வச்ச ஸ்பெஷல் குறி
இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு என்ன நடந்தது என்று பேசிய ஆயுஸ் மத்ரே ” மகி பாய் என்னை சாம்பியன் என்று அழைத்தார். ஆனால் அவர் ஏன் என்னை அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார். நல்ல பேட்டிங் தொழில்நுட்பத்துடன் அதிரடியாக விளையாடக்கூடிய அரிய திறமையை வைத்திருக்கின்ற காரணத்தினால்தான், இந்த சிறுவனை தோனி சாம்பியன் என்று அழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






