கடைசி 17 பந்து 55 ரன்.. தோனி கெயிலை தாண்டி ரசல் மிரட்டல் சாதனை.. தீக்சனாவுக்கு வச்ச ஸ்பெஷல் குறி

0
165
Russell

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரசல் அதிரடியாக சதம் அடித்து தோனி மற்றும் கெயில் ஆகியோரை தாண்டி புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். கொல்கத்தா அணிக்கு குர்பாஸ் 25 பந்தில் 35 ரன், சுனில் நரைன் 9 பந்தில் 11 ரன், கேப்டன் ரகானே 24 பந்தில் 30 ரன், ரகுவன்சி 31 பந்தில் 44 ரன் எடுத்தார்கள்.

- Advertisement -

ஆண்ட்ரே ரசல் அதிரடி

இதைத்தொடர்ந்து ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்த போதிலும் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக ரசலை அனுப்பி வைத்தார்கள். வழக்கத்திற்கு மாறாக ரசல் மிகவும் பொறுமையாக விளையாடினார். அவர் தான் சந்தித்த முதல் 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதற்கு அடுத்து அதிரடியாக விளையாட ஆரம்பித்த ரசல் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 25 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடக்கம். இதைத்தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. ரசல் தான் சந்தித்த கடைசி 17 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரசல் செய்த சாதனை

இன்றைய போட்டியில் முதலில் தீக்சனா பந்து வீச வந்த பொழுது மிகவும் பொறுமையாக விளையாடிய ரசல், மீண்டும் தீக்சனா வந்த பொழுது தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். ஆரம்பத்தில் தான் அதிக டாட் பந்து விளையாடிய பொழுது கவலைப்படவில்லை என்றும், ஆடுகளத்தில் பந்து கிரிப் ஆகி வந்ததால் பொறுமை காட்ட வேண்டி இருந்தது என்றும் ரசல் கூறியிருக்கிறார்.

மேலும் ஐபிஎல் தொடரில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக அரை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி கெயில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை தாண்டி ரசல் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 17 வயசுதான்.. இந்த சிஎஸ்கே பையனுக்கு சுயநலமே இல்ல.. அவர் மேல தப்பு சொல்லாதீங்க – சேவாக் வலியுறுத்தல்

13- ஏபி.டிவில்லியர்ஸ்
10 – வார்னர்
9- போலார்ட், ரஸல்
8- தோனி, கெய்ல், சூர்யா
7- நரைன், பந்த், பூரன்

- Advertisement -