நான் ரோகித்துக்கு ஃபோன் பண்ணி இதை செய்ய போறேன்.. என்னால அத நம்பவே முடியல – ரகானே பேட்டி

0
150
Rahane

நேற்று ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கேகேஆர் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் ரகானே ரோகித் சர்மா குறித்து முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததின் காரணமாக 95% ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து கேகேஆர் அணி வெளியேறிவிட்டது. நடப்பு சாம்பியனாக உள்ளே வந்த அணி இந்த முறை சரியான முறையில் செயல்பட முடியவில்லை. அதே சமயத்தில் பேட்ஸ்மேனாக ரகானே சிறப்பாக விளையாடி இருந்தார்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பு

இந்தியா டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக வந்த பிறகுதான் ரகானே மற்றும் புஜாரா இருவரும் இந்திய அணியில் இருந்து முழுதாக ஒதுக்கப்பட்டார்கள். நடுவில் இருவருக்குமே ஒரு மறு வாய்ப்பை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தேர்வுக் குழுவினர் கொடுத்தார்கள்.

இதை புஜாரா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரகானே இதை நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தார். ஆனால் மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சரியாக விளையாடவில்லை. இதன் காரணமாக இதற்கு அடுத்த இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் இல்லாத போதும் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு ஃபோன் செய்வேன்

இந்த நிலையில் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது குறித்து பேசி உள்ள ரகானே “நான் அப்பொழுது விளையாடிக் கொண்டிருந்த காரணத்தினால் எனக்கு அவர் ஓய்வு பெற்ற விஷயம் தெரியாது. இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்கு நான் சிறந்த முறையில் அவருடைய டெஸ்ட் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”

இதையும் படிங்க : ரோகித்தை தொடர்ந்து.. விராட் கோலிக்கும் வித்தியாசமாக கட்டம் கட்டிய பிசிசிஐ.. வெளியான புதிய தகவல்கள்

“அவர் மிடில் ஆர்டரில் ஆரம்பித்து பிறகு துவக்க ஆட்டக்காரராக அருமையான முறையில் விளையாடியிருக்கிறார். அவர் அணிக்காக சிறப்பான பங்களிப்புகளை கொடுத்திருக்கிறார். நான் மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்றவுடன் அவருக்கு ஃபோன் செய்வேன் இல்லையென்றால் மெசேஜ் செய்து அவருடைய டெஸ்ட் ஓய்வுக்கு என்னுடைய வாழ்த்துக்களை நிச்சயம் தெரிவித்துக் கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -