20 ஓவரில் 305 ரன்.. 31 சிக்ஸ்.. ஆயுஷ் பதோனி ஆர்யா உலக சாதனை பார்ட்னர்ஷிப்.. டெல்லி டி20 லீக் 2024

0
763
Badoni

தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கம் முதல் முறையாக நடத்தும் டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று வடக்கு டெல்லி அணிக்கு எதிராக தெற்கு டெல்லி அணி 20 ஓவர்களில் 35 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறது.

இன்று டெல்லி பிரிமியர் லீக்கில் தெற்கு டெல்லி மற்றும் வடக்கு டெல்லி மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தெற்கு டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு எடுத்தது. எடுத்த முடிவுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அந்த அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்கள்.

- Advertisement -

ஆயுஷ் பதோனி – பிரியன்ஷ் ஆர்யா

தெற்கு டெல்லி அணியின் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஷர்தாக் ரேய் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடைய விக்கெட்டை ஏன் எடுத்தோம் என்று வடக்கு டெல்லி அணி வருத்தப்படும் அளவுக்கு அடுத்த ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இருவரும் அதிரடியில் பின்னி எடுத்து விட்டார்கள்.

இந்த இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு அதிரடியாக 286 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். இதில் ஆயுஷ் பதோனி மட்டும் 55 பந்துகளை மட்டுமே சந்தித்து 8 பவுண்டரிகள் மட்டுமே அடித்து, இன்னொரு பக்கத்தில் 19 சிக்ஸர்களை நொறுக்கி தள்ளி 165 ரன்கள் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா தன் பங்குக்கு 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 120 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இறுதியாக 20 ஓவர்களில் தெற்கு டெல்லி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்து மிரட்டியது. தெற்கு டெல்லிஅணி பேட்டிங் இன்னிங்ஸில் மட்டும் ஒட்டுமொத்தமாக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் 19 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு டெல்லி அபார வெற்றி

இதற்கு அடுத்து மெகா இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வடக்கு டெல்லி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரன்சு விஜயரன் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். தெற்கு டெல்லி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : 6,6,6,6,6,6.. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்.. இந்திய இளம் சூப்பர் ஸ்டார் அதிரடி சதம்.. டெல்லி டி20 லீக்

மேலும் இந்த போட்டியில் ஆயுஷ் பதோனி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஒட்டுமொத்த டி20க்கு வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்த ஜோடி உலகச் சாதனை படைத்திருக்கிறது!

- Advertisement -