ஐபிஎல் 2025

என்ன சாதித்தாலும்.. அந்தப் பெருமை தோனிக்குதான்.. என்னோட இந்த விஷயத்தையே அவர்தான் மாற்றினார் – அக்சார் பட்டேல்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து மூன்றாவதாக நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சார் பட்டேல் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 5 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்தவர். அதைவிட இந்திய அணிக்காக 3 ஐசிசி தொடர்களையும் வென்று கொடுத்த ஒரே மகத்தான கேப்டன் என்ற மாபெரும் பெருமை அவருக்கு உண்டு. இந்த சூழ்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக எம் எஸ் தோனி திகழ்ந்தார்.

அப்போது அந்த அணியில் விளையாடிய ஆல் ரவுண்டர் அக்சார் பட்டேல், தனது முன்னேற்றம் குறித்து மகேந்திர சிங் தோனியிடம் பல விஷயங்கள் பேசியதாகவும், அவரது நுட்பமான கருத்துக்களே தான் சாதிப்பதற்கு பெரிய உந்துகோலாக அமைந்தது எனவும் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார் மேலும் இனி நான் என்ன சாதித்தாலும் அதில் எம்எஸ் தோனிக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” என் கிரிக்கெட் வாழ்க்கையில் எம்எஸ் தோனிக்கு மிகப்பெரிய பங்கு எப்போதும் உண்டு. அவர் ஒருமுறை என்னிடம் உங்களுக்கு கிரிக்கெட்டில் வேறு மாதிரியான நல்ல விஷயங்கள் நடக்கும். எனவே சில அடிப்படைகளை சரி செய்யுமாறு கூறினார். மஹி பாயுடன் எனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பைக்கு பிறகு தோனியிடம் இருந்து எனக்கு மெசேஜ் கிடைத்தது.

இதையும் படிங்க:18 வருட ஐபிஎல் தொடரில்.. ஹர்திக் பாண்டியா புதிய வரலாறு.. எந்த ஜாம்பவானும் செய்யாத சாதனை

அதற்கு முன்பே நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது தோனி வழிகாட்டியாக வந்தார். அப்போதே நான் அவரிடம் பேசி இருக்கிறேன். எனது மனநிலையைப் பற்றி நான் அவரிடம் பெரிதாக பேசுவேன். நான் அப்போது பேசியதன் விளைவு தான் ஐசிசி தொடர்களில் நான் என்ன சாதித்தேன் என்பதை பார்க்க முடியும். எனவே அதற்குப் பிறகு நான் என்ன சாதித்தாலும் அந்த பெருமைக்கும், மாற்றத்திற்கும் காரணம் தோனி பாய் மட்டுமே” என்று அவர் கூறி இருக்கிறார்

- Advertisement -
Published by