அக்சர் படேலை ஒன்பதாவது இடத்தில் இறக்கியது ஆச்சரியமாக இருக்கிறது! – வாசிம் ஜாபர் பரபரப்பு பேச்சு!

0
155
Jaffer

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது மூன்றாவது போட்டி முடியும் நிலைக்கு வந்திருக்கிறது!

இந்த டெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை பெரிதாக விளையாடவில்லை. இதில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே விதிவிலக்கு. மிகச் சிறப்பாக விளையாடிய அவர் முதல் டெஸ்ட் போட்டியில் சதமும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 30 ரன்களுக்கு மேலாக விளையாடியிருந்தார்.

- Advertisement -

இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய இந்த வேளையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் படேல் மிகச் சிறப்பான பேட்டிங் பங்களிப்பை தந்து இந்திய அணி வெற்றி பெற பெரிய உறுதுணையாக இருந்தார்கள்.

இவர்களில் குறிப்பாக அக்சர் இரண்டு அரை சதங்கள் விளாசி அற்புதமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அவருக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்ய ஒன்பதாவது இடமே கிடைத்தது. இதனால் அவருக்கு சரியான பார்ட்னர் கிடைக்காமல் அவரால் ரண்களுக்கு போக முடியவில்லை. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருமுறையும் அவர் நாட் அவுட் ஆக விளையாட பார்ட்னர் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிங் ஜாபர் ” அக்ஷர் பட்டேல் ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. விளையாடுவதற்கு அவருக்கு பார்ட்னர்கள் இல்லாமல் அவர் நிற்க வேண்டியதாய் இருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ரன்கள் குவித்தவர்களில் அவர் தான் முதலில் இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் ஒன்பதாவது இடத்தில் தான் அனுப்பப்பட்டார். இந்திய அணியின் சிந்தனையாளர் குழு என்ன நினைக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர் எல்லாவிதமான வெங்கட்டிலும் பேட்டிங் செய்வதில் மிகவும் வசதியாக தெரிந்தார்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியர்களை போல இந்திய அணி பேட்ஸ்மேன்களிடம் ஒழுங்கான பார்ட்னர்ஷிப் இல்லை. பேட்டர்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக விளையாட வேண்டும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பீல்டர்களுக்கு நாம் அங்கீகாரம் வழங்க வேண்டும். கவாஜா மிகச் சிறப்பான கேட்ச் செய்து ஸ்ரேயாசை வெளியேற்றினார். அந்த நேரத்தில் அங்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் உருவாகி இருந்தது. அதேபோல் புஜராவையும் ஸ்மித் வெளியேற்றினார்!” என்று கூறியுள்ளார்!