சிரித்த ஆவேஷ் கான், கூலாக சிக்ஸர் அடித்து போட்டியை முடித்த கே எஸ் பரத் – கடைசி பந்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி

0
86
KS Bharath and Avesh Khan

சில நிமிடங்களுக்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி முடித்தது. இந்த இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் போட்டியாகும். போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷா 48 ரன்களும் தவன் 43 ரன்களும் குவித்தனர்.

பின்னர் களமிறங்கிய விளையாடிய பெங்களூர் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஓபனிங் வீரர்கள் படிக்கல் 0 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கே எஸ் பரத் மற்றும் டி வில்லியர்ஸ் சற்று நிதானமாக விளையாட தொடங்கினார். இருப்பினும் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஏ பி டிவில்லியர்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

- Advertisement -

பின்னர் கிளன் மேக்ஸ்வெல் உடன் இணைந்து கே எஸ் பாரத் அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். 52 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 78 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல், பெங்களூரு அணியை கேஸ் பரத் தனது சிக்ஸர் மூலம் வெற்றி பெறச் செய்தார். அவருக்குத் துணையாக விளையாடிய மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடித்து 51 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆணவச் சிரிப்பை அழுகையாக மாற்றிய கேஸ் பரத்

19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 150 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவை. கடைசி ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் வீச வந்தார். முதல் மூன்று பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 7 ரன்கள் குவித்தார். அடுத்த மூன்று பந்துகளில் அந்த அணி 8 ரன்கள் எடுத்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

மீதமிருந்த 3 பந்துகளில் முதல் பந்தை சந்தித்த பாரத் ரன் எதுவும் குவிக்கவில்லை. அந்த பந்தை வீசிய ஆவேஷ் கான் கேஸ் பரத்தை பார்த்து சற்று இளக்காரமாக தன்னுடைய ஆணவ சிரிப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் மிக கூலாக இருந்த பரத் அதற்கு அடுத்த பந்தில் 2 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

மீதமுள்ள ஒரு பந்தில் அந்த அணி 6 ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில், கடைசி பந்தை ஆவேஷ் கான் வைடாக வீசினார். இதன் காரணமாக கடைசி பந்தில் தற்போது 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பெங்களூர் அணி இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட கேஎஸ் பரத் அந்த பந்தை தூக்கி அடித்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்தார். கே எஸ் பரத் அடித்த அந்த சிக்சர், ஆவேஷ் கானின் ஆணவச் சிரிப்பை பார்த்து பதிலுக்கு சிரித்தது என்றுதான் கூறவேண்டும்.

பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா அணியை சந்திக்கவிருக்கும் பெங்களூரு அணி

வருகிற திங்கட்கிழமை நடக்க இருக்கும் எலிமினேட்டர் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்தப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கோப்பையை வெல்லும் வேகத்தில் பெங்களூரு அணி களமிறங்க போவதால், இந்த ஆட்டம் சுவாரசியமாக அமையும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கலாம்.