தோல்வி எதிரொலி.. அவேஷ் கான் இந்திய அணியில் சேர்ப்பு.. யாருக்கு பதிலா தெரியுமா.?.. 2வது டெஸ்ட்க்கு முன் அதிரடி முடிவு.!

0
4044

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 26ம் தேதி துவங்கியது. சென்சூரியன் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு பலமாக இல்லாதது மிக முக்கியக் காரணம்.

முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா அணியை 108.4 ஓவர்கள் பேட்டிங் செய்யவிட்டு 408 ரன்கள் கொடுத்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள். இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ரா மட்டுமே மிகச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை அள்ளினார். சிராஜ் ஓரளவு தாக்குப் பிடித்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மறுபக்கம் பிரசித் கிருஷ்ணா – தாக்கூர் ஜோடியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இவர்களின் ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் வேகமாக ரன்கள் திரட்டினர். இருவரும் தலா ஒரு விக்கெட் எடுத்த நிலையில் தாக்கூர் 5.3 மற்றும் கிருஷ்ணா 4.7 எக்கனாமியில் பந்துவீசியது மிகப் பெரிய பின்னடைவு. பும்ரா – சிராஜ் ஜோடி கொடுத்த அழுத்தத்தை இவர்கள் இருவரது ஓவர்களில் ரீலீஸ் செய்தது தென் ஆப்ரிக்கா.

இந்திய டெஸ்ட் அணியில் முதலில் இடம் பெற்றிருந்த முஹம்மத் ஷமி கணுக்கால் காயம் காரணமாக விலகினார். அவர் இல்லாதது இந்திய அணியை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. வேகப் பந்துவீச்சை மேலும் பலப்படுத்த பிசிசிஐ தற்போது அவருக்கு மாற்று வீரராக ஆவேஷ் கானை அறிவித்துள்ளது.

இந்தியா ஏ – தென்ஆப்ரிக்கா ஏ அணிகளுக்கு நடுவே நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆவேஷ் கான் 5 விக்கெட் ஹால் எடுத்து நல்ல ஃபார்மில் உள்ளார். மேலும் அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியிலும் சீனியர் அணிக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிக்காட்டினார்.

- Advertisement -

ஷமி இல்லாத குறையை இவர் தீர்த்து வைப்பார் என பிசிசிஐ நம்பி இவரை அணிக்குள் இழுதுள்ளது. கேப்டவுனில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிருஷ்ணாவுக்கு பதிலாக இவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.