AUSvsWI.. மீண்டும் மாஸ் காட்டும் வெஸ்ட் இண்டீஸ்.. எதிர்பாராமல் தடுமாறும் ஆஸி.. 2வது டெஸ்டில் திருப்பம்

0
239
Australia

வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று கேப்டன்கள் உடன் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இதற்கடுத்து தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கிபகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் தைரியமாக பேட்டிங் செய்வது என அறிவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பிரத்வயிட் 4, டேகனரைன் சந்தர்பால் 21, மூன்றாவது வீரர் க்ரீக் மெக்கன்சி 21, அலீக் அதனஸ் 8, ஜஸ்டின் க்ரிப்ஸ் 6 என வெளியேற, 64 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஐந்து விக்கெட்டுகள் இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் கவிம் ஹாட்ஜ் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோசுவா டி சில்வா இருவரும் சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக விளையாடி மாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரிய முறையில் மிகப் பொறுமையாக விளையாடிய அவர்கள் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சோதித்தார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. ஜோசுவா டி சில்வா 157 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடைய கூட்டாளி கவிம் ஹாட்ஜ் 194 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இவர்களுக்கு நேர் எதிராக 22 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஆட்டம் இழக்காமல் கெவின் சின்கிளைர் 16 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் தாக்குப்பிடித்து விளையாடி 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : 23 ஓவரில் பாஸ்பால் விளையாடிய ஜெய்ஸ்வால்.. இந்தியா முதல் நாளில் வலுவான முன்னிலை.. இங்கிலாந்து பின்னடைவு

ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 20 ஓவர்கள், 68 ரன்கள் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கடுமையான முறையில் பேட்டிங்கில் ஆஸ்திரேலியா அணியிடம் போராடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பகல் இரவு டெஸ்ட் என்பதால் நாளை முதல் செசன் ஓரளவுக்கு விளையாடி, மாலை துவங்கும்போது ஆஸ்திரேலியாவை பேட்டிங் வர வைத்தால் வெஸ்ட் இண்டீஸ் கை ஓங்கலாம்!