AUSvsWI.. 10வது விக்கெட் 55 ரன்.. வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்.. முதல் டெஸ்டில் ஸ்மித் ஓபனிங்

0
366
WI

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

இதன் முதல் போட்டி இன்று அடிலைய்ட் ஓவல் மைதானத்தில் அதிகாலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை முடிவு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் பிராத்வையிட் 13, டேக்ரைன் சந்தர்பால் 6, கிர்க் மெக்கன்சி 50, அலெக்சாதனாஸ் 13, கெவிம் ஹாட்ஜ் 12, ஜஸ்டின் கிரேவ்ஸ் 5, ஜோசுவா டி சில்வா 6, அல்ஜாரி ஜோசப் 14, மோட்டி 1 ரங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 133 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து இருந்தது.

இந்த நிலையில் அறிமுக போட்டியில் விளையாடும் வேகப் பந்துவீச்சாளர் ஷாமார் ஜோசப் 36, கெமார் ரோச் 17* ரன்கள் என 55 ரன்கள் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 62.1 ஓவரில் 188 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள். ஸ்டார்க் மற்றும் லயன் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

மேலும் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால் ஸ்டீவன் ஸ்மித் துவக்க ஆட்டக்காரராக களம் வந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளராக பேட்டிங்கில் எட்டாவது இடத்திற்கு வந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் அசத்தி, இப்பொழுது முதல் இடத்திற்கு சென்று இருக்கிறார்!

கடைசியாக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி இருந்தது. தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றினால், தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளை வெல்லும். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பு மிகப் பிரகாசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.