ஆசஸ் டெஸ்ட் தொடர்.. திடீரென ஓய்வை அறிவித்த ஆஸி வீரர்.. காலியாகும் கூடாரம்.. முழு தகவல்கள்

0
134
Australia

தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஒருவர் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்த தொடரில் இதுவரையில் நான்கு போட்டிகள் நடைபெற்ற இருக்கிறது. ஆஸ்திரேலியா முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி விட்டது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னி மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

சிறப்பு வீரர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஆசியாவில் இருந்து வந்தவராக உஸ்மான் கவஜா இருக்கிறார். அவருடைய சொந்த நாடு பாகிஸ்தான். இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியா உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம் பெற்று பிறகு சர்வதேச அணியிலும் இடம் பெற்ற சிறப்பு வீரராக இருக்கிறார்.

நடப்பு ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டதால் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

திடீர் ஓய்வு

தற்பொழுது 39 வயதாகி இருக்கும் உஸ்மான் கவாஜா சிட்னி டெஸ்ட் உடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவர் இதுவரையில் 87 டெஸ்ட், 40 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி ஒட்டுமொத்தமாக 8000 சர்வதேச ரன்கள் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால இப்படி அவமானப்படுத்தப்பட்டன்.. மோசமா நடத்தினாங்க – ஜேசன் கில்லெஸ்பி பேட்டி

இந்த நிலையில் தன்னுடைய சொந்த நகரத்தில் சிட்னியில் நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தான் எடுத்துச் செல்வதற்கு பல நல்ல நினைவுகளையும், எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்களையும் கிரிக்கெட் தனக்கு கொடுத்திருப்பதற்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -