தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் திரும்புகின்ற காரணத்தினால் அந்த அணி மேலும் வலிமை அடைந்திருக்கிறது.
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் 11ம் தேதி ஆரம்பித்து 15ம் தேதி வரையில் அதிகாரப்பூர்வமாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த காலங்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுப்பதாகவும், ஆஸ்திரேலியா அணியை வென்று தாங்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவோம் என்றும் அந்த அணியின் வேகப்பந்து பேச்சாளர் அன்ட்ரிச் நோர்க்கியா கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவஜா மற்றும் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் இடம்பெற்று இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அதே வேகப்பந்து வீச்சு யூனிட் மற்றும் சுழல் பந்து வீச்சு யூனிட் விளையாடுகிறது.
இந்த நிலையில் காயமடைந்து இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் இருந்த கேமரூன் கிரீன் மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பியிருக்கிறார். இதில் இன்னொரு முக்கியத்துவம் முனையாக மிச்சல் மார்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருடைய இடத்தில் இந்தியருக்கு எதிராக சேர்க்கப்பட்ட பியூ வெப்ஸ்டர் மீண்டும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.
இதையும் படிங்க : நேர்மையா சொல்றேன்.. 2027 உலக கோப்பையில் ரோஹித் கோலி விளையாட மாட்டாங்க.. காரணம் இதான் – சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியா அணி : பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னிமன், மார்னஸ் லாபுசாக்னே, நேதன் லியான், ஸ்டார்க், ஸ்மித், பியூ வெப்ஸ்டர் மற்றும் ரிசர்வ் வீரராக பிரெண்டன் டோகெட்.