இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளை சிட்னி மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரை சமன் செய்து பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லையென்றால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும்.
இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் பொழுது உஸ்மான் கவஜா, லபுசேன், ஸ்மித் என முன்னணி பேட்ஸ்மேன்கள் எல்லோரும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்தார்கள். தொடர் செல்ல செல்ல அனைவருமே திரும்ப பேட்டிங் ஃபார்முக்கு வந்து விட்டார்கள். இதேபோல் பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ் முதல் போட்டிக்கு பிறகு அதிரடியாக திரும்பி வந்துவிட்டார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஒரே பலவீனமாக வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ் இருந்து வருகிறார். பேட்டிங்கில் அவரிடம் எந்த பங்களிப்பும் இந்த தொடரில் கிடைக்கவில்லை. எனவே ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தற்பொழுது ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு அவரை கை விடுவதாக அறிவித்திருக்கிறது.
இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்பாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக மிட்சல் மார்ஸ் நீக்கப்பட்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு இவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மற்றபடி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஓய்வெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்த போதிலும் அணி தொடரை வெல்ல வேண்டும் என்கின்ற காரணத்தினால் அவர் விளையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : கேப்டன் தேவையில்லை கோச் நான் இருக்கேன்.. ரோகித் ஆடறத முடிவு செய்யல.. காரணம் இதான் – கம்பீர் பேட்டி
சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன் மற்றும் ஸ்காட் போலண்ட்.