தற்போது ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொடரில் நடைபெற்ற முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் வலிமையான முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் காலை துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றால் தொடரை கைப்பற்றி விடும்.
கேப்டன் மாற்றம்
ஆஸ்திரேலியா அணிக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. முன்னாள் கேப்டன் ஸ்மித் பொறுப்பை ஏற்று செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு கேப்டன் பேட் கம்மின்ஸ் திரும்பி வருகிறார்.
இத்துடன் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியின் நட்சத்திர ஸ்பின்னர் நாதன் லயன் சேர்க்கப்படவில்லை. இது அப்போது பெரிய விவாதங்களை உருவாக்கி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவரை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்கிறார்கள்.
தொடரை வெல்லுமா?
தற்போது ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் யூனிட் வலிமையாக காணப்படுகிறது. மேலும் ஸ்டார்க் நல்ல பவுலிங் ஃபார்மில் இருந்து வருகிறார். தற்போது கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் திரும்பி வந்திருப்பது மேலும் அணியை பலமாக்குகிறது. இங்கிலாந்து ஏதாவது கொஞ்சம் தவறுகள் செய்தாலே இந்த போட்டியை தோற்று தொடரையும் தோற்று விடும்.
இதையும் படிங்க : பும்ரா இல்லை.. எனக்கு பவுலிங் இவர்தான் ரொம்ப ஹெல்ப் பண்றார்.. அப்போ என் வேலை ஈசியா இருக்கு – ஹர்ஷித் ராணா பேட்டி
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்:
ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசேன், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலண்ட்.






