இன்று இந்திய அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் எல்லோரது பார்வையும் டிராவிஸ் ஹெட் மேல் இருக்க, ரிக்கி பாண்டிங் இன்னொரு இளம் வீரர் தனி ஒருவராக இந்திய அணிக்கு எதிராக போட்டியை வெல்ல முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடப்புச் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் செமி பைனல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மதியம் மோதிக்கொள்ள இருக்கின்றன. 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை அடைந்திருக்கின்ற காரணத்தினால் இந்த போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்திய அணிக்கு குவியும் அறிவுரைகள்
தற்போது நடக்க இருப்பது மிகவும் முக்கியமான போட்டி என்கின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு வெளியில் இருந்து நிறைய அறிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய அணிக்கு எதிராக ஹெட் நிறைய செய்து விட்டதாகவும், எனவே இந்த முறை அவரை ஷமி சீக்கிரத்தில் அவுட் செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
அதே சமயத்தில் ஹெட்டுக்கு எதிராக வரும் சக்கரவர்த்தியை புதிய பந்தில் பந்து வீச வைக்க வேண்டும் எனவும், மேலும் அவரை எப்படி அவுட் செய்ய வேண்டும் எனவும் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆலோசனைகளை கூறியிருக்கிறார். இப்படி வெளியில் இருந்து வரும் கருத்துக்கள் இந்த போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன.
இந்த இளம் வீரர் போதும்
இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “ஜாக் பிரேசர் மெக்கர்க் தனக்கு கடைசி ஆறு மாதங்களில் கிடைத்த வாய்ப்புகள் குறித்து கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஏனென்றால் அவர் சிறப்பாக விளையாடவில்லை அவருக்கு வாய்ப்புகளும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர் தற்போது ஏதாவது செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார். அவர் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு விளையாடுவது போல விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : ஹெட்டுக்கு இதுதான் பிளான்.. வருண் கிட்ட பந்தை குடுங்க.. இந்த மாதிரி வீச சொல்லுங்க – அஸ்வின் அட்வைஸ்
“உண்மை என்னவென்றால் அவருக்கென்று ஒருநாள் இருக்கும். செமி பைனல் என்பது பெரிய போட்டி, நீங்கள் இங்கு எச்சரிக்கையாக விளையாட வேண்டும். நீங்கள் அவரை ஆதரித்து அவருக்கு முக்கியமான போட்டியில் ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும். அவர் தனி ஒரு வீரராக போட்டியை வெல்வதற்கான திறமை படைத்தவர் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.