இந்திய அணிக்காக பசியோட காத்திருக்கேன்.. 10 வருஷமா முடியாத பிசினஸ் அது – ஆஸி நாதன் லயன் பேட்டி

0
175
Lyon

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்கிறது. இந்த தொடரில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வெல்வதற்கு பசியோடு இருப்பதாக ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக கடைசியாக 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. அதற்குப் பிறகு நான்கு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியிடம் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி இந்த நான்கு டெஸ்ட் தொடரையும் இரண்டுக்கு ஒன்று என இழந்திருக்கிறது. இதில் இரண்டு தொடர்களில் முதலில் வெற்றி பெற்று போட்டியில் முன்னிலை வகித்த பொழுதும் கோப்பையை வெல்ல முடியாமல் போயிருக்கிறது.

எனவே இந்த முறை சொந்த நாட்டில் இந்திய அணிக்கு எதிராக எப்படியும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் மொத்த ஆஸ்திரேலியா அணியும் மிகப்பெரிய அளவில் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் சரியான வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து தயாராகிக் கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் கூறும் பொழுது “இது பத்து வருடமாக முடிவடையாத ஒரு பிசினஸ் ஆக இருந்து வருகிறது. நீண்ட காலமாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் வெல்ல முடியாமல் இருந்து வருகிறது. விஷயங்களை மாற்றி அமைத்து கோப்பையை வெல்வதற்கு நான் மிகவும் பசியோடு காத்திருக்கிறேன். நிச்சயம் என்னால் செய்ய முடியும் என்று தெரியும்.

நாங்கள் சிறப்பாக விளையாடியிருக்கும் தொடர்களில் என்ன செய்திருக்கிறோம் என்று நான் எப்பொழுதும் சிந்தித்துப் பார்ப்பேன். அதே சமயத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படாத தொடர்களில் என்ன தவறாக போயிருக்கிறது என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பது கற்றுக் கொள்வதில் மிகவும் முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : கடவுளே இந்த விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட்ல நடக்கக்கூடாது.. நஷிம் ஷா சொன்னது கவலையா இருக்கு – கம்ரன் அக்மல் வருத்தம்

என்னால் இந்திய அணிக்கு எதிராக சில விஷயங்களை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் சில ஆண்டுகளாக வித்தியாசமான டெஸ்ட் அணியாக இருப்பதாகவும் சிறந்த அணியாக மாறுவதற்கான பயணத்தில் இருப்பதாகவும் உணர்கிறேன்.நாங்கள் தற்போது சிறந்த டெஸ்ட் அணியாக உருவெடுக்கவில்லை. ஆனால் அதற்கான பயணத்தில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -