பாகிஸ்தான் வீரர்களளே ஒத்துக் கொள்வதில்லை.. ஆனால் பாபர் அசாம் கோலி போன்றவர்தான் – ஆஸி உஸ்மான் கவாஜா பேட்டி

0
211
Virat

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரையும் ஒன்றாக வைத்து யார் பெரியவர் என அலசும் போக்கு ரசிகர்களிடையே மிக அதிகமாக இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவரும் சமமானவர்கள் என ரசிகர்கள் பேசுகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடும் உஸ்மான் கவாஜா கூறியிருக்கிறார்.

விராட் கோலி 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடிக்கும் வரையில் அவருடைய பேட்டிங் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இதற்கு அடுத்துதான் மீண்டும் அவர் பழைய விராட் கோலியாக மாறி வந்தார்.

- Advertisement -

இந்த இடைப்பட்ட காலத்தில் விராட் கோலியை பாபர் அசாம் மிஞ்சி விட்டார் என்றும், இனி உலக கிரிக்கெட் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் தான் ஆட்சி செய்வார் என்றும் பரவலாக பலராலும் பேசப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இப்படியான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி வேகமாக திரும்பி வந்து 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட ஆரம்பித்து அங்கிருந்து 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் உச்சத்தை எட்டினார். இந்த காலகட்டத்தில் பாபர் அசாம் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். தற்போது வரை அவர் அந்த வீழ்ச்சியிலிருந்துமீண்டு வரவில்லை.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் அகமத் ஷேஷாத் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடுவது மிகவும் தவறானது என்றும், பாபர் அசாம் எப்பொழுதும் விராட் கோலி ஆக முடியாது என்றும், விராட் கோலி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றும் வெளிப்படையாகவே கூறி வருகிறார். இதை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரும் ஒப்புக்கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் கேஎல் ராகுல் துபே இருக்கட்டும்.. இவரை மட்டும் தூக்கிடுங்க – ஆர்சிபி முன்னாள் அனலைஸ்ட் பிரசன்னா அட்வைஸ்

இந்த நிலையில் இது குறித்து கூறியிருக்கும் ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா “பாபர் அசாம் எப்பொழுதும் விராட் கோலி போல பேட்டிங் செய்வது கிடையாது. ஆனால் சில காரணங்களால் அவர் விளையாடுவதை பார்க்கும் பொழுது அது விராட் கோலி விளையாடுவது போலவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். தற்போது இவரது கருத்து மீண்டும் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் விவாதங்களை துவக்கி இருக்கிறது.

- Advertisement -