தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக்கொள்ள இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியை வெல்வது எளிதானது இல்லை என்று கூறியிருக்கிறார்.
இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு 2025 ஜனவரி முதல் வாரத்தில் முடிவுக்கு வருகிறது. மேலும் 90 களுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 5 போட்டிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது.
கடந்த கால வரலாறு
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஆரம்ப காலம் தொட்டு மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. இந்த நிலையில் விராட் கோலி தலைமையில் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்பொழுது ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாததால் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும் பேசப்பட்டது.
இப்படியான நிலையில் மீண்டும் 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருந்த ஆஸ்திரேலியா அணியை தோற்கடித்தது. ஆனால் இந்திய அணியில்தான் விராட் கோலி, அஸ்வின் பும்ரா, சமி என பல முன்னணி நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து தொடரில் இல்லாமல் போனார்கள். இப்படி இரண்டு முறை மிகச் சிறப்பான வெற்றியை அடுத்தடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெற்றிருக்கிறது.
இந்திய அணியை தோற்கடிப்பது எளிதில்லை
தற்போது இது குறித்து பேசி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கூறும் பொழுது “இந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை நினைக்கும் பொழுது உற்சாகமாக இருக்கிறது. உங்களுக்கு தெரியும் இது ஒரு சிறந்த டெஸ்ட் தொடராக இருக்கும். இந்தியா சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறது. நாங்களும் சில ஆண்டுகளாக சிறந்த முறையில் விளையாடிக் கொண்டு வருகிறோம். இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு வந்த பொழுது அவர்களை எங்களால் தோற்கடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க : ஓபனா சொல்றேன். தோனி விராட் கிடையாது.. கேப்டனா ரோகித்தான் அந்த விஷயத்துல அதிகம் உழைப்பாரு – அஸ்வின் கருத்து
இந்திய அணி நல்ல சமநிலை கொண்ட சிறப்பான அணியாக இருக்கிறது. இந்திய அணி தேவையான எல்லா பகுதிகளையும் கவர் செய்த அணியாக இருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா வந்த பொழுதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடியது, நாங்கள் இந்தியா சென்ற பொழுதும் அங்கும் நல்ல கிரிக்கெட்டை விளையாடியது. அவர்களை வெல்வது என்பது கடினமாக இருக்கும். இது மிகச்சிறந்த கோடைகாலமாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.