நேற்று பயிற்சி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்த ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் பும்ராவுக்கு எதிராக விளையாடுவதற்கு காத்திருப்பதாக அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணியில் இடம் பெற்று இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 19 வயதான வலதுகை துவக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக 97 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். மேலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாவதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்.
முதல் வாய்ப்பை தவறவிட்ட விதம்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே சாம் கான்ஸ்டாஸ்க்கு ஆஸ்திரேலியா அணியில் துவக்க வீரராக வாய்ப்பு தர வேண்டும் என பிரெட் லீ போன்ற முன்னாள் வீரர்கள் அழுத்தமாக சிபாரிசு செய்து வந்தார்கள். மைக்கேல் கிளார்க் போன்ற சில முன்னாள் வீரர்கள் சாம் கான்ஸ்டாஸ்க்கு பெரிய அனுபவம் இல்லை என்பதால் மற்ற வீரர்களை சிவாரிசு செய்தார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்று இருக்கிறார். ஆனால் முதல் டெஸ்டில் அவர் பும்ராவை எதிர்த்து விளையாடி ஆட்டம் இழந்த விதம் பெரிய அளவில் ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. எனவே திடீரென சாம் கான்ஸ்டாஸ் சதம் அடிக்க அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்கின்ற ஆதரவு குரல்கள் அதிகரித்து இருக்கிறது.
பும்ராவை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்
இந்த நிலையில் பும்ரா பற்றி பேசிய சாம் கான்ஸ்டாஸ் கூறும் பொழுது “நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தற்பொழுது கிரிக்கெட் உலகில் வெளிப்படையாக பும்ரா மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். ஒரு நாள் அவரை எதிர்கொண்டு விளையாடும் பொழுது சிறப்பாக செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். நான் கடினமாக பயிற்சி செய்து என்னுடைய விளையாட்டையும் நம்புகிறேன். சிறந்த வீரர்களுக்கு எதிராகவிளையாட இது நல்ல வாய்ப்பு”
இதையும் படிங்க: 81ரன் 8 விக்கெட்.. பங்களாதேஷ் அணி பரிதாபம்.. வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான தொடக்கம்.. 2வது டெஸ்ட்
“நான் டிம் பெயின் உடன் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்து வருகிறேன். ரிவர்ஸ் ஸ்விங்கில் விளையாடுவதற்கு பயிற்சிகள் செல்கிறது. 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நேற்று நடைபெற்றதால், இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் கொடுத்து அதிரடியாக விளையாட டிம் பெயின் கூறினார். எனவே நான் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கவும் மற்றும் நான் எனது திட்டத்தில் ஒட்டிக்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.






