5-0.. இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து அனுப்பி வைப்போம்.. 10 வருஷம் சும்மா இல்ல – நாதன் லயன் சவால்

0
227
Lyon

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்வோம் என ஆஸ்திரேலியா நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் சவால் விட்டிருக்கிறார்.

இந்திய அணி கடந்த இரண்டு முறைகளாக ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்று வந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி உள்நாடு மற்றும் இந்தியாவில் வெல்ல முடியாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக நாதன் லயன் இந்த முறை மிகப்பெரிய வெற்றியை விரும்புகிறார்.

- Advertisement -

டிராவுக்கு வழியே கிடையாது

90களுக்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. பெரும்பாலும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்க் தொடரில் ஏதாவது ஒரு அணி தொடரை வெல்லும் முடிவுகளே வரும். பெரும்பாலும் தொடர் டிரா ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த முறை சொந்த நாட்டில் முழு பலத்துடன் களமிறங்கி இந்திய அணியிடம் இரண்டு முறை தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் முழுமையாக தயாராகி வருகிறது. தொடர் நெருங்க நெருங்க ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த தொடர் குறித்து மிகவும் அதிகமாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

5-0 ஒயிட் வாஷ் உறுதி

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து பேசி இருக்கும் நாதன் லயன் கூறும் பொழுது “நாங்கள் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்று 10 வருடங்கள் ஆகிறது. இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் நான் இது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் செல்கிறார்கள் என்பது குறித்து யோசித்தேன். நான் டீசண்டான ஒரு டெஸ்ட் தொடரை எதிர்பார்ப்பேன்.ஆனால்நீண்ட நாட்களாக நாங்கள் வெல்லாமல் இருப்பதால் இந்த முறை இந்திய அணியை 5-0 என வீழ்த்துவோம் எனக் கனித்திருக்கிறேன்”

“இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி உடன் நான் நிறைய பேசினேன். அவரை எப்படி ஜெய்ஸ்வால் விளையாடினார் என்பது குறித்து நிறைய தெரிந்து கொண்டேன். ஆஸ்திரேலியாவுக்கு சர்பராஸ் கான் வருவாரா அல்லது கே எல் ராகுல் வருவாரா? என்று தெரியவில்லை?. ஆனால் இந்திய அணியில் எல்லோரும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள்”

இதையும் படிங்க :vசேவாக் ஏபிடி இல்லை.. கம்பீர் தேர்ந்தெடுத்த ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் XI.. சேர்ந்து விளையாடியவர்கள் அணி

“எங்களுக்கு பெரிய ரன்கள் தேவைப்படுகிறது, பெரிய சதங்கள் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் தேவைப்படுகிறார்கள். ஸ்மித், மார்னஸ் லபுஷன் போன்ற வீரர்களிடமிருந்து 100, 110 ரன்கள் நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களிடமிருந்து 180, 200 ரன்கள் எனக்கு தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -