அலெக்ஸ் கேரி அடிச்ச 98 ரன்.. திடீரென ஓய்வை அறிவித்த வேறொரு ஆஸ்திரேலிய ஸ்டார் வீரர்

0
496
Wade

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாட் கம்மின்ஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்பொழுது நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியது.

31 ஆண்டுகளில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் நியூசிலாந்து அணி இருந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் மிட்சல் மார்ஸ் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் உடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 98 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கும் தொடரை வெல்வதற்கும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மிக முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் காரணமாக அலெக்ஸ் கேரி சிவப்பு பந்து கிரிக்கெட் வடிவத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இன்னும் சில காலம் நிரந்தர விக்கெட் கீப்பராக தொடர்வார் என்பது உறுதியாகி இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் நிர்வாகம் இரண்டாவது விக்கெட் கீப்பராக ஒரு இளம் வீரருக்கே வாய்ப்பு கொடுத்து வளர்க்க பார்க்கும்.

இப்படியான காரணத்தினால் 36 வயதான ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட்டுக்கு இனி ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனை உணர்ந்திருக்கும் மேத்யூ வேட் திடீரென தாமாக முன்வந்து சிவப்பு பந்து கிரிக்கெட் வடிவத்தில் இருந்து அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் உள்நாடு மற்றும் ஆஸ்திரேலியா பணிக்காக விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்காக மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1613 ரன்கள் எடுத்திருக்கும் இவர் ஓய்வு குறித்து கூறும் பொழுது “முதலில் எனது மனைவி ஜூலியா மற்றும் எனது குழந்தைகள் ஆகியோருக்கு, நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் நான் உலகம் முழுவதும் சுற்றி ஆஸ்திரேலியாவுக்கும் விளையாடிய காலகட்டங்களில், என்னை ஆதரித்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீண்ட கிரிக்கெட் வழங்கும் சவால்களை நான் முழுமையாக அனுபவித்து இருக்கிறேன். நான் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவேன் என்றாலும், ஆஸ்திரேலியா டெஸ்ட் எடுக்காத பச்சை நிற தொப்பி அணிந்து விளையாடுவதை சிறப்பானதாக வைத்திருந்தேன்.

இதையும் படிங்க : 47 ஓவர்.. நிசாங்கா அசலங்கா நங்கூர ஆட்டம்.. பங்களாதேஷ் அணிக்கு திருப்பி கொடுத்த இலங்கை

என்னை ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் வளர அடித்தளம் இட்ட விக்டோரியா அணிக்கும், எனது சிவப்பு பந்து கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக முடித்துக் கொள்வதற்கு உதவிய டாஸ்மெனியா அணிக்கும், எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுக்க என்னுடன் பயணித்த கிரிக்கெட் வீரர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.