ஆர்சிபிக்கு வந்த சோதனை.. ஸ்டார் வீரர் இந்தியா திரும்புவதில் சிக்கல்.. தொடரை விட்டு விலகலா.? வெளியான அப்டேட்

0
239

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பதட்டம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒத்திவைத்த பிசிசிஐ வருகிற 16-ஆம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் காயம் அடைந்த நட்சத்திர ஆர்சிபி வீரர் மீண்டும் போட்டிகளுக்கு திரும்புவதில் பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.

- Advertisement -

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்

பதினெட்டாவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதட்டம் காரணமாக 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைத்தது. இந்த சூழ்நிலையில் தற்போது நிலைமைகள் சிறிது சிறிதாக சீராகி வரும் நிலையில் மீண்டும் போட்டிகளை வருகிற 16-ம் தேதி முதல் நடத்துவதற்கு முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வருகிற 16-ம் தேதி முதல் தொடங்கும் இந்த போட்டிகள் மே 25ஆம் தேதிக்குள் முடிக்க தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருவதாகவும் சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூர் மூன்று மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் அதன் நட்சத்திர பவுலரான ஆஸ்திரேலியவைச் சேர்ந்த ஜோஸ் ஹாசில்வுட் மீண்டும் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆர்சிபி வீரர் சந்தேகம்

கடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடாத ஜோஸ் ஹாசில் வுட் அடுத்தடுத்த போட்டிகளில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கி இங்கிடி விளையாடினார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா திரும்பி இருக்கும் ஹாசில் வுட் போட்டிகள் வருகிற 16-ஆம் தேதி முதல் துவங்கினால் அவர் திரும்பவும் பெங்களூர் அணிக்கு விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் ரசிகர்களுக்கு நல்ல செய்தி.. தேதிகள் வெளியானது.. மேலும் ஒரு மகிழ்ச்சி சம்பவம் – முழு தகவல்கள்

அவரது தோள்பட்டை காயம் இன்னும் சரியாக குணமாகாத நிலையில், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. எனவே அவரது காயம் முழுமையாக குணமடைந்து விரைவாக பங்கேற்பாரா? அல்லது அவருக்கு பதிலாக மாற்று வீரர் விளையாட வேண்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதே சிஎஸ்கே போட்டியில் காயம் அடைந்த கேப்டன் ராஜத் பட்டிதார் கைவிரலில் ஏற்பட்ட காயம் மெல்ல குணமாகி வரும் நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? அல்லது அதற்கு அடுத்த போட்டிகளில் தான் பங்கேற்க முடியுமா? என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -