ஆஸ்திரேலியா வீரர் கிளன் மேக்ஸ்வெல் தற்போது இந்திய அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர்கள் ஒருவரின் திறமை குறித்து மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்
இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக பல ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணி குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் நல்லவிதமாக தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய தொடரில் துருப்பு சீட்டு இந்திய வீரர்கள்
தற்போது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இருவரை நம்புகிறார்கள்.
மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய பவுலிங் யூனிட்டில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை. இந்த நிலையில் பும்ராவை மட்டுமே பந்து வீச்சில் மிகவும் நம்பி இருக்கிறது. இந்திய பவுலிங் யூனிட் எப்படி அமையும் என்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை.
எல்லா காலத்திலும் இவரே சிறந்தவர்
இந்த நிலையில் மேக்ஸ்வெல் பும்ரா பற்றி பேசுகையில் “நான் எதிர்கொண்ட பவலர்களில் பும்ராதான் சிறந்தவராக இருக்கலாம். அவர் எல்லா காலத்திலும் சிறந்த பந்துவீச்சாளராக இருப்பது மட்டுமில்லாமல், எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்”
இதையும் படிங்க : 2024 ஐபிஎல்-ல் 8வது இடத்தில் பேட்டிங் வந்தேன்.. காரணம் டி20 உலக கோப்பைதான் – தோனி வெளியிட்ட தகவல்
“அவரின் ரிலீஸ் பாயிண்ட், பந்தை தனக்கு முன்னால் இருந்து அவர் விடுவிப்பது, கடைசி நேரத்தில் தேவைக்கு தகுந்தபடி பந்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது. மேலும் நம்ப முடியாத அளவுக்கு சிறந்த மெதுவான பந்து மற்றும் அபாரமான யார்க்கர், மேலும் பந்தை இரண்டு புறத்திலும் ஸ்விங் செய்யும் திறமை, மேலும் புத்திசாலித்தனமான மணிக்கட்டு ஆறு அம்சங்களையும் பெற்று, ஒரு முழுமையான பந்துவீச்சாளருக்கான எல்லா தந்திரங்களையும் வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.