2024 ஐபிஎல்-ல் 8வது இடத்தில் பேட்டிங் வந்தேன்.. காரணம் டி20 உலக கோப்பைதான் – தோனி வெளியிட்ட தகவல்

0
230
Dhoni

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் தோனி வந்து விளையாடுவதற்கான உண்மை காரணத்தை கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி மேலே வந்து விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பலரும் கேட்டுக்கொண்ட நிலையிலும் கூட அவர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்திற்கு கீழே வந்துதான் விளையாடினார். தற்போது இதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

2024 டி20 உலகக் கோப்பை

இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய பிளேயிங் லெவனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே இடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தோனி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்டிங் டச்சில் தெரிந்த பொழுதும் கூட, தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாட வேண்டும் என இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் கேட்டுக் கொண்ட போதும் கூட, அவர் எட்டாவது இடத்திலும் ஒரு போட்டியில் அதற்கு கீழேயும் வந்து விளையாடினார்.

- Advertisement -

உண்மை காரணம் இதுதான்

இது குறித்து தற்பொழுது பேசியிருக்கும் தோனி கூறும் பொழுது “இந்த விஷயத்தில் என்னுடைய சிந்தனை மிகவும் எளிமையாக இருந்தது. மற்ற பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடும் பொழுது நான் மேலே போய் விளையாட வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. இதன் காரணமாக நான் மேலே சென்று விளையாடவில்லை”

இதையும் படிங்க : ஆஸி தொடர்.. இந்திய அணியை பார்த்து பாகிஸ்தான் இதுல காப்பி அடிக்குது.. அப்படியாச்சும் ஜெயிச்சா சரி – பசித் அலி கருத்து

“மேலும் அந்த ஐபிஎல் தொடரின் போது 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட இருந்தது. எனவே எங்கள் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. எனவே அவர்கள் அங்கு நுழைவதற்கு நாங்கள் எங்கள் சிஎஸ்கே அணியில் பேட்டிங் வரிசையில் முன்னே விளையாட வைத்து வாய்ப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனவே நான் மேலே வரவில்லை. மேலும் நான் என்னுடைய கிரிக்கெட்டை பிடித்த வகையில் அனுமதித்து விளையாட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -