எனக்கும் கோலிக்கும் நடுவுலதான் போட்டியே.. நிச்சயமா அந்த சம்பவங்கள் காத்திருக்கு – மிட்சல் ஸ்டார்க் பேச்சு

0
111
Starc

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மோதிக் கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. இந்தத் தொடர் குறித்து எதிர்பார்ப்பு அதிகம் இருக்க மிட்சல் ஸ்டார்க் விராட் கோலி குறித்து பேசி இருக்கிறார்.

கடைசியாக 1990-91ஆம் ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியா அணியில் மோதிக் கொண்ட டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு தற்பொழுதுதான் இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடர் நான்கு போட்டியில் இருந்து ஐந்து போட்டிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விராட் கோலி

விராட் கோலி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆறு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 54 ரன் சராசரியில் 1352 ரன்கள் குவித்திருக்கிறார். அதே சமயத்தில் வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் உள்நாட்டில் 50 டெஸ்ட் போட்டிகளில் 217 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் இதுவரையில் விராட் கோலி மற்றும் மிட்சல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்துக் கொண்ட பொழுது நான்கு முறை ஸ்டார்க் ஆட்டம் இழக்க செய்திருக்கிறார். அதேபோல் ஸ்டார்க் பந்துவீச்சில் 394 பந்துகளைச் சந்தித்து 236 ரன்கள் விராட் கோலி எடுத்திருக்கிறார். ரன் ஆவரேஜ் 59 ஆக இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி உடன் மோதலை விரும்புகிறேன்

இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி குறித்து பேசி இருக்கும் மிட்சல் ஸ்டார்க் கூறும் பொழுது “நாங்கள் இருவரும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காரணத்தினால் விராட் கோலிக்கு எதிராக மோதுவதை நான் விரும்புகிறேன். எனக்கு எப்பொழுதும் அவரிடம் நல்ல மோதல் இருக்கும். வெளிப்படையாக சில முறை நான் அவரை ஆட்டம் இழக்க வைத்திருக்கிறேன். அவரும் என்னுடைய பந்துவீச்சில் ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. நாங்கள் இருவரும் திரும்பி மோதிக் கொள்வதை நாங்கள் இருவருமே விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித் பாய் கேப்டன் இல்ல வித்தியாசமானவர்.. அவர் அந்த படத்து ஹீரோ மாதிரி – சர்பராஸ் கான் பேட்டி

மேலும் இந்த தொடர் குறித்து பேசி இருந்த ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் விராட் கோலி மற்றும் ஸ்மித் இருவரில் ஒருவர் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்றும், மேலும் இந்த தலைமுறையின் சிறந்த இரண்டு வீரர்கள் மோதிக் கொள்வதை பார்ப்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -