கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரே போட்டியில் ஐசிசி விதியை மீறிய 2 அணிகள்.. பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டி20 தொடர்

0
735

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் கிரிக்கெட் விதிகளை மீறிய அரிய நிகழ்வு நடந்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் முதல் டி20 போட்டி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக ஆட்டம் ஏழு ஓவராக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஏழு ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியின் கிலென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர் என 43 ரன்கள் குவித்தார். இதில் பாகிஸ்தான் அணியில் அப்ரி, ஹாரிஸ் ராப் நஷீம் ஷா ஆகியோர் தலா இரண்டு ஓவர்கள் வீசி இருந்தார்கள். அப்பாஸ் அப்ரிடி ஒரு ஓவர் வீசினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ஏழு ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

ஐசிசி விதியை மீறிய இரண்டு அணிகள்

இந்த சூழ்நிலையில் மழையின் காரணமாக ஏழு ஓவராக குறைக்கப்பட்ட ஒரு டி20 ஆட்டத்தில் ஐசிசி கிரிக்கெட் விதிப்படி இரண்டு பவுலர்கள் மட்டுமே அதிகபட்சமாக இரண்டு ஓவர்கள் வீச வேண்டும். மீதி 3 ஓவர்களை அடுத்த மூன்று பவுலர்கள் தலா ஒரு ஓவர் வீசிக்கொள்ளலாம். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி மூன்று பவுலர்களை பயன்படுத்தி இரண்டு ஓவர்களை வீச, பதிலுக்கு ஆஸ்திரேலியா அணியும் ஸ்பென்சார் ஜான்சன், சேவியர் பார்லிட், நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா இரண்டு ஓவர்கள் வீசி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:ராஜா அவர் கோட்டைக்கு வந்துட்டாரு.. ஆனா நான் சொல்ற இத மட்டும் விராட் செய்யணும் – ரவி சாஸ்திரி பேட்டி

மீதம் ஒரு ஓவரை ஆடம் ஜம்பா வீசி இருக்கிறார். இரண்டு அணிகளும் இப்படி ஐசிசி கிரிக்கெட் விதியை மீறி இருக்கும் நிலையில் அதை நடுவரும் கவனிக்காமல் இது பிரிஸ்பேன் தவறு என்று கூறப்படுகிறது. ஒரே போட்டியில் இரு அணிகளும் ஐசிசி விதியை மீறி இருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணத்தில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இரண்டாவது போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -