ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் டி20 கிரிக்கெட்டில் சிறந்த அதிரடி வீரராக கருதப்படுகிறார். தொடக்க வீரராக களம் இறங்கி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டை விட எளிதானது என்றும், அதனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவே விரும்புவதாக அதற்கான காரணத்தை ஹெட் கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் தற்போது ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடி வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், நான்காவது அதிவேக சதம் அடித்த வீரராகவும் இருக்கிறார்.
வார்னர் இல்லாத குறையை நிரப்ப இவரது அதிரடி ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பயனுள்ள வகையில் அமைந்து வருகிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் குறித்த அழுத்தம் இருப்பதாகவும், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த தடையும் இல்லை தனது விருப்பத்திற்கு ஏற்ப விளையாட முடியும் என்பதால் டெஸ்ட் கிரிக்கெட் விரும்புவதாகவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் டி 20 கிரிக்கெட்டை மிகவும் கடினமானதாக கருதுகிறேன். ஏனென்றால் ரன்கள் குவிக்க வேண்டிய அழுத்தம் இருக்கிறது. எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியேறும் போது 130, 140 அல்லது 150 ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாட வேண்டும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் நான் ஓரளவு எளிதாக இருப்பதாக உணர்கிறேன்.
நான் சூழ்நிலை நன்றாக இல்லை என்று உணர்ந்தால் என்னால் மெதுவாக விளையாடவும் முடியும், அடித்து ஆட வசதி இருந்தால் அதற்கு தகுந்தவாறு என்னால் அதிரடியாக விளையாட முடியும். நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு எந்த தடையுமே இருக்காது. எனவே நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன். தொழில்நுட்பம், நிபந்தனைகள் மற்றும் பிற செயல்களில் இது கடினமானது.
இதையும் படிங்க:ஒரே 1 ரன்.. திரில் போட்டியில் ரெய்னா அணி தோல்வி.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் அதிரடி.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட் 2024
ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது” என்று ஹெட் தகுந்த விளக்கம் அளித்திருக்கிறார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் விளையாடுவதை விட டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.