சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையிலும் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழும் வென்றது. இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற பொழுது தீவிரமான கொண்டாட்டத்தை ராகுல் டிராவிட் வெளிப்படுத்தினார். பெரும்பாலும் அவர் அப்படி இருப்பவர் இல்லை. தற்போது தான் ஏன் அப்படி கொண்டாடினேன்? என்று விளக்கம் கூறியிருக்கிறார்.
இந்திய அணி இறுதியாக 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஒரு உலகக் கோப்பை தொடரை வென்று இருந்தது. அதற்கடுத்து 13 ஆண்டுகளாக இந்திய அணிக்கு ஐசிசி உலகக் கோப்பை வறட்சி இருந்து வந்தது. உலக அளவில் பெரிய கிரிக்கெட் வாரியமாக ஆதிக்கம் செலுத்தினாலும் ஐசிசி தொடர் எதையும் வெல்லாதது இந்திய கிரிக்கெட்டுக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் கூட இந்திய அணியால் அந்த இரண்டு முறையும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இது உளவியல் ரீதியாகவே இருவரையும் கடுமையாகப் பாதித்து இருந்தது.
ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கடைசியாக ஒரு உலகக்கோப்பை தொடரில் இணைந்து வேலை செய்யலாம் என டி20 உலகக்கோப்பை தொடரில் இணைந்து வேலை செய்து கோப்பையையும் கைப்பற்றி சிறந்த முடிவை அமைத்துக் கொண்டார்கள். தற்போது தான் ஏன் ஆக்ரோஷமாக கொண்டாடினேன்? என்பது குறித்து ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
இது குறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது “இதையெல்லாம் நாம் திட்டமிடுவது கிடையாது. ஒரு பயிற்சியாளராக நான் என் உணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலான நேரங்களில் முயற்சி செய்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் நான் என்னுடைய அணிக்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.மேலும் என்னுடன் மிகக் கடுமையாக உழைத்த பயிற்சியாளர் குழுவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதன் காரணத்தால் தான் நான் அப்படி கொண்டாடினேன்.
இதையும் படிங்க : 3வது போட்டி.. மழை இலங்கைக்கு தொடரை ஜெயித்துக் கொடுக்குமா?.. வானிலை அறிக்கை – முழு விபரங்கள்
நான் கடந்த இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் இந்திய அணி உடன் பயிற்சியாளராக இருந்தேன். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் எங்களால் வெல்ல முடியவில்லை. நெருங்கி வந்து தோற்றோம். அந்த நேரத்தில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும், உங்கள் வழியில் விஷயங்கள் செல்ல கொஞ்சம் விதியும் தேவை. டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் எங்களுக்கு அது இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






