களத்தில் இந்த இந்திய வீரரோடு மோதுவது ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு ஸ்பெஷலா ஒரு காரணம் இருக்கு – லபுஷேன் பேட்டி

0
72

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக இரண்டு அணி வீரர்களும் அதற்கு முன்னால் நடைபெறும் தொடர்களில் விளையாடி பியிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மார்னஸ் லபுசேன் இந்திய வீரர் ஒருவருடன் களத்தில் மோதிக் கொள்வதை ரசிப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போன ஆஸ்திரேலியா அணி களத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சண்டை போடுவது மட்டுமல்லாமல் வீரர்களிடம் வாய் வார்த்தைகள் வழியான தாக்குதல்களையும் தொடுக்கும். இதனால் வீரர்கள் அவற்றால் தூண்டப்பட்டு விரைவில் ஆட்டமிழந்து வெளியேறுவார்கள் என ஆஸ்திரேலியா அணிக்கு இதில் நம்பிக்கை உண்டு. இதற்கு சற்றும் சளைக்காத வகையில் இந்திய அணியும் பதிலடி கொடுத்து வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடும் போதே ஆஸ்திரேலிய வீரர்கள் எதாவது வாதத்தில் ஈடுபட்டால் அதற்கு தக்க பதிலடி அடுத்த நொடியே இந்திய அணியும் கொடுத்துவிடும். இதில் விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை தகுந்த எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த சூழ்நிலையில் முகமது சிராஜுடன் களத்தில் மோதுவதை தான் ரசிப்பதாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மார்னஸ் லபுசேன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் இந்தியாவின் முஹம்மது சிராஜ் உடன் பல காரணங்களுக்காக சண்டையிடுவதை ரசிக்கிறேன். நாங்கள் 2015 – 16ஆம் ஆண்டில் எம்ஆர்எப் அகாடமியில் இருந்தோம். அந்த அகாடமியில் சிராஜ் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போதுதான் நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடினோம். நான் அவரை முதன்முதலாக சந்தித்து விளையாடிய போது அவரது கரியர் முன்னேற்ற வழியில் சென்றது.

அவருக்கு விளையாட்டின் மீது மிகுந்த அன்பு, ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்வது என அனைத்தும் இருக்கிறது. இது போன்ற வித்தியாசமான அனுபவங்களில் இருந்து எங்களது தொழில் வாழ்க்கை நகர்வதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது” என்று சிராஜ் குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:பாபர் உன் மனசு சரியில்ல.. லோக்கல் மேட்ச்ல கூட பாவம்.. உடனே இதை செய்பா – ரஷித் லத்திப் அறிவுரை

டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது சிராஜுன் பந்துவீச்சில் லபுசேன் இரண்டு முறை ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதத்தில் இருந்து இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான தொடர் ஆரம்பிக்கப்படுவதால் இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

- Advertisement -